Daily Archives: October 27, 2022

விந்தன் சிறுகதைகள் – 20

அவள் என்னவானாள்? ஏனோ தெரியவில்லை; கடந்த மூன்று மாத காலமாகக் கணத்துக்குக் கணம், ‘’அவள் என்னவானாள், அவள் என்னவானாள்?’’ என்ற கேள்வி என் உள்ளத்தில் எழுந்த வண்ணம் இருக்கிறது. என்ன காரணத்தினாலோ அவளிடம் என் உள்ளத்தைப் பறி கொடுத்து விட்ட நான், உண்ணாமல் உண்ணும் போதும், உறங்காமல் உறங்கும் போதும், தொழில் செய்யாமல் செய்யும்போதும் கூட அந்தக் கேள்வியையே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்பதில்தான் இல்லை. இத்தனைக்கும் அவள் தன் கடைசிக் கடிதத்தில்-வெறுப் கடிதத்தில் அல்ல; காதல்…

வாழ்வின் வண்ணங்கள் – 19 – கை.அறிவழகன்

ஊருக்குப் போவதென்றால் அம்மாவுக்கு அத்தனை ஆசை, ஊருக்குப் புறப்படுகிற நாளுக்கு முந்தைய இரண்டு நாட்களில் அம்மா வழக்கமான தனது அதட்டல்களை விட்டு விடுவார். மாலைப்பொழுதில் படிக்கச் சொல்லி அச்சுறுத்த மாட்டார், கழுவி அடுக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள் இரவில் குழல் விளக்கின் ஒளிபட்டு எதிரொளிக்கும், வீடு முழுக்கத் துடைத்து தரையின் ஓரத்தில் இருக்கும் சிவப்பு பார்டர் பளிச்சென்று தெரியும். அப்பாவிடம் சொல்ல வேண்டிய விஷயங்களை மிக மெல்லிய குரலில் முந்தைய நாள் இரவில் பேசும்போது ஜன்னல் வழியாக வருகிற நிலவொளியில்…

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 6 – ஆதனூர் சோழன்

தரத்தை வரையறுங்கள் தரம் என்றால் என்ன என்பதை முதலில் உங்கள் குழந்தைகளுக்கு புரியவைக்க வேண்டும். ஒரு வேலையை சுத்தமாகவும் திருத்தமாகவும் செய்வது எப்படி என்பதை புரிய வைக்க வேண்டும். அவர்களுக்கு தரம் எனும் இலக்கை அடைய சிரமம் ஏற்பட்டால், பொறுமையாக அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். உதாரணமாக, “உனது அறையை சுத்தம் செய்” என்று நீங்கள் சொல்கிறீர்கள். உங்களது பையனோ பெண்ணோ வீட்டை சுத்தம் செய்கிறார். பையனின் கழற்றிப் போட்ட பள்ளி யூனிபார்ம் சேரில் கிடக்கிறது. அதை…

சிந்தனைக் களம் – 20 – Bamini Rajeswaramudaliyar

அழகான ரம்மியமான சூழலில் பேத்தியுடன் நடைப்பயிற்சிக்கு வந்தேன். குளிர்மையான காற்றும், மெல்லிய சூரிய கதிர்களின் வெளிச்சமும், செயற்கையான நீர்விழ்ச்சியின் சலசலத்த சங்கீதம் போன்ற ஓசையும் தாலாட்டாகி விட எனது எட்டு மாதக் குழந்தையான பேத்தி விளையாடிய களைப்பும் சேர தூங்கி விட்டாள். செயற்கையாக உருவாக்கப்பட்ட அழகான lake இல் பலவிதமான பறவைகளும், மீன்களும், குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடலும், பெற்றோருடன், தாத்தா பாட்டியுடன், தாயுடன் தனியாக ,தந்தையுடன் தனியாக வந்திருக்கும் குழந்தைகளும், பெற்றோரை சக்கர நாட்காலியில் வைத்து தள்ளி…

எம்.ஆர்.ராதாவின் சிறை அனுபவங்கள் – 17– விந்தன்

17. ஜி.டி.நாயுடுவைச் சந்தித்தேன் ‘வாழ்க்கையிலே எத்தனையோ மேடு பள்ளங்களிலே ஏறி இறங்கியவன் நான். பெரியார் போட்ட பூட்டு என்னை என்ன செய்யும்? அதையும் எப்படியோ சமாளிச்சேன். அடுத்தாப்போலக் குமாரபாளையத்திலே எங்க நாடகம் நடந்துக்கிட்டிருந்தது. கூட்டமாவது கூட்டம், சொல்ல முடியாத கூட்டம். ஒரு நாளைப்போலக் கொட்டகை நிரம்பி வழிஞ்சிக் கிட்டிருந்தது…” “புதிய நாடகமா?” “இல்லே, பழையநாடகம்தான்; அதே ‘இழந்த காதல்’ தான். ஆனா ஒண்ணு..” “என்ன ? “நான் பேசற நாடக வசனங்கள் அப்பப்போ மாறிக்கிட்டிருக்கும். அந்த வசனங்களிலே…

நேரம் நல்ல நேரம் – 5 – ஆதனூர் சோழன்

கல்யாண வாழ்க்கை கிரானைட் குவாரியல்ல ஒரு கூட்டணி அரசாங்கம் எப்படி பிரச்சனை இல்லாமல் இயங்க முடியாதோ அப்படித்தான். கல்யாணவாழ்க்கையும். எனவேதான், எந்தச் சூழ்நிலையிலும் விவாகரத்து முடிவுக்கோ, பிரிந்து வாழும் முடிவுக்கோ அவசியமே இல்லை. நிஜம் என்னவென்றால் கல்யாணம் என்பதே சோதனை செய்து வாழக் கற்றுக் கொள்கிற, வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவங்களையும் இனிமையான அனுபவங்களாய் மாற்றிக் கொள்ளக் கூடிய இணைப்புதான். காதல் திருமணங்களிலேயே பிரச்சனைகள் சகஜம் என்பதை காலம் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி, நெருங்கிய…

வாழ்வியல் சிந்தனைகள் – 36 – ராதா மனோகர்

inconvenient spirituality நிச்சயமாக நீ சாமி கும்பிட்டாலும், கும்பிடாவிட்டாலும் அடையப்போகும் இடம் ஒன்றுதான் நான் உங்களை தொந்தரவு செய்வதற்கு நீங்கள் என்னை மன்னிக்கவேண்டும். ஆனால் உண்மையில் மகிழ்ச்சி அடையவேண்டும். எதையும் புதிதாக அறிவதிலும் பார்க்க ஏற்கனவே நாம் அறிந்தவற்றை மறப்பது அவ்வளவு எளிதல்ல. ஒரு குழந்தையின் விளையாடு பொருளை பறித்தால்அதற்கு கோபம் வருவது இயல்புதான். நீங்கள் சந்தோஷமாக கொண்டாடும் கோட்பாடுகள் நம்பிக்கைகளை எல்லாம் விட்டு சற்று மாற்றி யோசிப்பது அவ்வளவு எளிதல்ல. ஏற்கனவே நாம் அறிந்த ஒன்று…