Daily Archives: November 12, 2022

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 16 – ஆதனூர் சோழன்

பணியிடங்களில் சிறந்துவிளங்க… பணம்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஆதாரமாக இருக்கிறது. சிலர் சொந்தத் தொழில் மூலமாகவும், பலர் நிறுவனங்களில் பணியாற்றுவதன் மூலமும் சம்பாதிக்கின்றனர். பணிக்கு செல்பவர்கள், பணியிடங்களில் தினமும் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். அந்த பிரச்சினைகளை சரியான வழியில் கையாள வேண்டியது அவசியமாகிறது. நிறுவனங்கள், தங்களுடைய உற்பத்தி செலவில் 75 சதவீதத்தை ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காகவே செலவிடுகின்றன. ஆகவே, பணியாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ஒவ்வொரு நிறுவனமும் கருதுவது இயல்புதான். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பணியிடங்களில் சிறந்து விளங்க…

எம்.ஆர்.ராதாவின் சிறை அனுபவங்கள் – 27 – விந்தன்

27. இரு கெட்டிக்காரர்கள் கதை “நாடகம் சிலருக்குக் கலையாயிருக்கும்; சிலருக்குத் தொழிலாயிருக்கும். எனக்கோ அது கலையாகவும் தொழிலாகவும் மட்டுமில்லே, தொண்டாகவும் இருந்தது, தொண்டுன்னா நான் வேறே எந்தத் தொண்டையும் சொல்லல்லே; சமூகச் சீர்திருத்தத் தொண்டைத்தான் சொல்றேன்,,” “பெரியார் சீடராயிற்றே, வேறு என்ன தொண்டைப் பற்றிச் சொல்லப் போகிறீர்கள்?” “பெரியார் சீடனாயிருந்தாலும் அந்தத் தொண்டுக்கு முதலில் எனக்கு வழி காட்டியவர் பேரறிஞர் அண்ணாங்கிறதை நான் இன்னும் மறக்கல்லே, என்னிக்கும் மறக்க மாட்டேன்…” “அது எப்படி?” “அவர்தான் திருச்சி திராவிடக்…

வாழ்வின் வண்ணங்கள் – 27 – கை.அறிவழகன்

பறவைகளைக் கூர்ந்து நோக்குதல் (Bird Watching) என்றொரு பழக்கமும் பதமும் மேற்கத்திய நாடுகளில் உண்டு. இறுக்கமான மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில் சிக்கிக் கொண்டவர்கள் உடலையும் மனதையும் தளர்த்திக் கொள்ள பறவைகளைப் பின்தொடர்தல் அல்லது கூர்ந்து நோக்குதலை மேற்கொள்கிறார்கள். பறவைகளின் இயக்கம், இயற்கையோடு இசைந்த அவற்றின் கேவல்கள், பறத்தல் இவையெல்லாம் மனித மனதை சமநிலைப்படுத்த உதவுகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள், அது உண்மையும்‌ கூட. இந்தியாவிலும் கூட மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடிய பெரும்பணக்காரர்களும், பறவைகளைக்…

விந்தன் சிறுகதைகள் – 30

நடக்காத கதை “காத்தாயி! அந்தப் பக்கிரிப் பயல் போற ‘மிடுக்‘ கைப் பார்த்தியா? மானத்தைப் பார்த்துக்கிட்டு இல்லே அவன் நடக்கிறான்? என்னதான் வாழ்வு வந்தாலும் இப்படியா?’’ என்று அதிசயித்தவண்ணம், கையிலிருந்த புகையிலையிலிருந்து கொஞ்சம் திருகி எடுத்து வாய்க்குள் திணித்துக்கொண்டான் கண்ணுச்சாமி. வீட்டுக்குள் ஏதோ வேலையாயிருந்த காத்தாயி வெளியே வந்து பார்த்தாள். பக்கிரி ராணுவ உடையுடன் ‘கவாத்து நடை’ நடந்து சென்று கொண்டிருந்தான். “ஆமாம், சண்டைக்குப் போய் வந்த சூரர் இல்லே; அப்படித்தான் நடப்பாரு!” என்றாள் காத்தாயி. ‘’ஊம்….…

வாழ்வியல் சிந்தனைகள் – 41 – ராதா மனோகர்

முட்டாள்தனத்தில் இருந்து விடுதலை பெறுங்கள், அதுதான் உண்மையான விடுதலை ஆண்டாண்டு காலமாக அடிமைத்தனத்தில் ஊறியவர்கள் சுயமாக சிந்திக்கவும் சுயமாக சொந்த அபிபிராயங்களை உருவாக்கவும் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். படித்தவர் பாமரர் பேதமின்றி இந்த இரவல் சிந்தனை வியாதி நமது சமுகத்தில் வேரோடி போய்விட்டது. இந்த இழிநிலைக்கு எம்மை இட்டு சென்ற காரணிகளில் முதலாவது காரணியாக இருப்பது, எம்மீது அழுத்தமாக பதியப்பட்ட சமயம் சார்ந்த நம்பிக்கைகளாகும், இரண்டாவது கலாசாரம் அல்லது அரசியல் போன்ற காரணிகளால் எம்மீது திணிக்கப்பட்ட கோட்பாடுகளாகும். எமது…

சிந்தனைக் களம் – 31 – Bamini Rajeswaramudaliyar

கசப்பான மனிதர்களால் உருவாக்கப்பட்ட சில குடும்பங்களின் reputation இளையவர்களின் வாழ்வை கெடுத்து விடுகிறது. அது ஒருபுறம் இருக்க உண்மைகளை ஆராய்ந்து புரிய விரும்பாமல் சேர்ந்து பேசும் உறவும் நட்பும் அவசியம்தானா என சிந்திக்க வேண்டுகிறேன். வலிகள் வேண்டாமே! வலிகளை தரும் உறவுகள் நட்புகளும் வேண்டாம். சிந்திக்கவும்! வயிறு எரிந்து பேசுபவர் வார்த்தைகள் மிகவும் அசிங்கமானது. அவர்களின் வார்த்தைகள் மற்றவர்களை பற்றி கூறவில்லை, தம்மைப் பற்றியே கூறுகிறது என்பதை நினைவில் நிறுத்தி கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். இவர்களுடன் சேர்ந்து…

நேரம் நல்ல நேரம் – 15 – ஆதனூர் சோழன்

உள்ளத்தின் கதவுகள் கண்களடா! உள்ளத்தின் கதவுகள் கண்கள் என்கிற முதுமொழி முற்றிலும் நிஜம் என்று சமீபத்திய ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஒருத்தரோட முகத்தைப் பார்த்தே அவர் நல்லவரா அல்லது கெட்டவரா என கூறிவிடுவேன் என்று நாமே பல சமயங்களில் கூறியிருப்போம். ஆனால் ஒருவர் உண்மை சொல்கிறாரா அல்லது பொய் சொல்கிறாரா? என்பதை கண்டறிய பெரும்பாலோர் முகத்தில் தவறான பாகத்தை கவனிக்கின்றனர். ஒருவர் பொய் சொல்கிறாரா என்பதை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் அவரது கண்கள், புருவங்கள் மற்றும் அவரது நெற்றியை கவனிக்க…