Daily Archives: November 15, 2022

எம்.ஆர்.ராதாவின் சிறை அனுபவங்கள் 28 – விந்தன்

திமுகவும் நானும்! அறுபத்திரண்டு எலெக்சன்னு நினைக்கிறேன்; ஜெமினி வாசன் ஒரு நாள் என் தோட்டத்துக்கு டெலிபோன் செய்து, ‘ஒரு காரியமா உங்களைப் பார்க்கணும். நான் உங்க தோட்டத்துக்கு வரட்டுமா, நீங்க என் வீட்டுக்கு வர்றீங்களா?’ன்னார். நானே வரேன்’ன்னு போனேன். அப்போ காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் ஒரு படம் எடுத்துக்கிட்டிருந்தார். அதிலே நீங்களும் நடிக்கணும்னார். ‘நடிக்கிறேன்; என் கருத்தைச் சொல்ல இடம் கொடுப்பீங்களா?’ன்னு கேட்டேன். ‘காமராஜைக் கேட்டுச் சொல்லணும்‘னார். ‘கேளுங்க’ன்னேன். கேட்டார்; ‘அது முடியாது’ன்னு அவர் சொல்லிட்டார்.…

அரிய‌வ‌கை ஏழைக‌ள் – Fazil Freeman Ali

ஐந்து நீதிப‌திக‌ள் கொண்ட‌ உச்ச‌நீதிம‌ன்ற‌ அம‌ர்வு வ‌ர‌லாற்று சிற‌ப்புமிக்க‌ தீர்ப்பொன்றை வ‌ழ‌ங்கியிருக்கிற‌து. ஆம், உய‌ர்சாதியிலுள்ள‌ ஏழைக‌ளுக்கு 10% இட ஒதுக்கீடு வ‌ழ‌ங்குவ‌து செல்லும் என்று தீர்ப்ப‌ளித்திருக்கிற‌து நீதிம‌ன்ற‌ம். வ‌ர்க்க‌ம்-சாதி ப‌ற்றிய‌ விவாத‌ம் இந்தியாவிற்கு ம‌ட்டுமே உரித்தான‌ ஒன்று. கார‌ண‌ம் Class என்ற‌ வர்க்க பாகுபாடு உல‌க‌ம் முழுக்க‌ உள்ள‌ ஒன்று என்றாலும் அது ஒருபோதும் பிற‌ப்போடு நிர‌ந்த‌ர‌மாக‌ முடிச்சிட‌ப்ப‌டுவ‌தில்லை. அர‌சிய‌லில் எதிரெதிர் துருவ‌ங்க‌ளில் நிற்கும் அமெரிக்காவிலும் முன்னாள் சோவிய‌த் யூனிய‌னிலும் ஒரு செருப்பு தைப்ப‌வ‌ரின் ம‌க‌ன் க‌ல்வியிலும்…

வாழ்வின் வண்ணங்கள் 28 – கை.அறிவழகன்

“இதையெல்லாம் எடுத்து ரேக்கில் வை” என்று உடைந்த ஆங்கிலத்தில் அவள் முதன்முறை சொன்னபோது நான் முடியாதென்றேன். குரலை உயர்த்தியவள் நீ இப்போது வைக்கத்தான் வேண்டும் என்று உறுதியாகச் சொன்னாள். இரண்டு கூடைகள் நிறையக் காய்களும், பழங்களும் இருந்தது. சிறிய கண்களும், குள்ளமான உருவமும் கொண்ட என்னை விடச் சிறியவள், கோவானியர்களுக்கே உரிய பழுப்பு நிறத் தோலும், மேற்கத்திய உடையுமாக கீச்சுக் குரலில் அவள் என்னை மிரட்ட ஆரம்பித்தாள். மும்பை வால்க்கேஷ்வரின் உயரமான குன்றுகளில் இருக்கும் அக்ரோபோலீஸ் 2…