Daily Archives: November 17, 2022

வாழ்வியல் சிந்தனைகள் – 42 – ராதா மனோகர்

எனது உறவு எனது சொந்தம் எனக்கே சொந்தமான LOVE ? பரஸ்பரம் அன்பான உறவுகள் மிகவும் இனிமையானவையாகும். நாம் அனுபவிக்கும் உறவுகள் பெரும்பாலும் பிறரை ஒரு கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வைத்திருக்க பயன்படும் தந்திரமாகவே கருதுகிறோம். பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையே உள்ள உறவானாலும் அல்லது காதலன் காதலிக்கு இடையே உள்ள உறவாக இருந்தாலும் அவை பெருதும் ஒரு சுய நலம் அல்லது (possessiveness) எனது உறவு எனது சொந்தம் எனக்கே சொந்தமான பொருள் போன்ற ஒரு உணர்வின் அடிப்படையில்…

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 18 – ஆதனூர் சோழன்

நீண்டநாள் வாழ…. மருத்துவ வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது. இறந்தவர்களை பிழைக்க வைக்க முடியவில்லையே தவிர, மரணத்தை தள்ளிப் போட முடிகிறது. பழுதடைந்த உடல் உறுப்புகளை, எந்திரத்துக்கு உதிரி பாகங்களை மாற்றுவதைப் போல, புதிய உறுப்புகளை மாற்ற முடிகிறது. ஆண் பெண் சேர்க்கையின்றி ஆய்வுக்கூடத்திலேயே உயிரைப் படைக்க முடிகிறது. அல்லது உருவாக்க முடிகிறது. மனிதனின் வாழ்நாள் அதிகரித்துள்ளது. அதிலும், ஜப்பானில் 100 வயதைத் தாண்டியும் நிறைய பேர் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்கள். உறுப்புகள் பழுதடைந்து நீண்ட நாள் வாழ்ந்து என்ன…

விந்தன் சிறுகதைகள் – 32

அன்பு விய வருஷம் பிறந்து விட்டதல்லவா? எனது நண்பன் நாராயணனுக்குக் கல்யாணமாகி இத்துடன் ஏழு வருஷங்களாகி விட்டன. இன்னும் அவர்களிடையே மலர்ந்த காதல், பிஞ்சு விடவில்லை! வேலைக்குப் போகும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவன் “லக்ஷ்மி!” என வேண்டியது; அவள் ‘ஏன்? என வேண்டியது – மாதாந்திர புட்ஜட், மைத்துனன் வருகை, அடுத்த வீட்டுக்காரியின் புதுப் புடவை, அவள் அகமுடையானின் வருமானம் ஆகியவற்றைப் பற்றி ஏதாவது பேச வேண்டியது; அவ்வளவுதான் – அப்பப்பப்பா!’ ‘அம்மம்மம்மா!’ என்று…

நேரம் நல்ல நேரம் – 17 – ஆதனூர் சோழன்

நோய் தீர்க்கும் உண்ணாவிரதம் ‘எந்த ஒரு முட்டாளும் உண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால் புத்திசாலிதான் அந்த விரதத்தை முறையாக முறித்துக் கொள்வான்.’ இது பெர்னாட்ஷாவின் பொன் மொழிகளுள் ஒன்று. நமது நாட்டில் மதரீதியான காரணங்களுக்காக உண்ணாவிரதம் இருப்பது வழக்கம். ‘இன்னிக்கு நான் கிருத்திகை விரதம்.’ ‘இன்னிக்கு நான் சனிக்கிழமை விரதம்’. ‘இன்னிக்கு நான் திங்கட்கிழமை விரதம்’. ‘ரம்ஜான் மாசமாச்சா. நான் நோன்பு.’ இப்படியெல்லாம் நம்மில் பலர் கூறக் கேட்டிருப்போம். ஆனால், உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும்…