Daily Archives: November 19, 2022

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 20 – ஆதனூர் சோழன்

கொழுப்பை கரைக்க 20 நிமிட பயிற்சி நாம் நிறைய சாப்பிடுவோம். ஆனால், அவை நன்றாக செரிப்பதற்காக என்ன செய்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க மாட்டோம். சாப்பிடுகிறோம். தூங்குகிறோம். அல்லது, ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்கிறோம். உடல் உழைப்பு அதிகம் இல்லாவிட்டால் நமது உணவில் உள்ள கலோரிகள் கொழுப்பாக சேர்ந்து பலவிதமான தொந்தரவுகளுக்கு காரணமாக அமைகிறது. நமது உணவில் உள்ள கலோரிகள் சிறப்பான முறையில் செரித்தால்தான், உடலுக்கு சக்தி கிடைத்து ஆரோக்கிய மாக இருக்க முடியும். இதற்காக…

விந்தன் சிறுகதைகள் – 34

காந்தியவாதி “நாளைக்குத் தீபாவளி!” என்று தலையைச் சொரிந்தான் குப்புலிங்கம். “ஆமாம், அதற்கென்ன இப்போது?” என்று அன்பையும் அஹிம்ஸையையும் சற்றே மறந்து கேட்டார், காந்திஜியின் படத்திற்கு அருகே விளக்கேற்றி வைத்து விட்டுப் பண்பே உருவாய் நின்று கொண்டிருந்த தோல் மண்டி துளசிங்கராயர். “ஒன்றுமில்லை…..” “என்ன ஒன்றுமில்லை? இதோ பாரும் போதுமென்ற மனந்தான் பொன் செய்யும் மருந்து!’ “உண்மைதான்; ஆனால் ஒன்று….’’ “என்ன ஆனால் ஒன்று?’’ ‘வயிறு போதுமென்று சொல்லாதவரை மனம் போதுமென்று சொல்லாது போலிருக்கிறதே!” “அதற்காகக் கடன் வாங்கித்…

வாழ்வியல் சிந்தனைகள் – 44 – ராதா மனோகர்

சகல சம்பவங்களுக்கும் எமக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும் ஒரு சம்பவம் நிகழும் முன்பாக அந்த சம்பவம் நிகழ்வதற்கு அத்திவாரமாக பல சம்பவங்கள் நடை பெறுவதை நாம் கவனித்திருப்போம். உதாரணமாக மழை வரும் சில நேரத்திற்கு முன்பாக வானம் மேகமூட்டமாக இருந்திருக்கும். எம்மை சுற்றி நடக்கும் சகல சம்பவங்களுக்கும் எமக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும். அது மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் சகல நிகழ்வுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளவையே. நடைபெறும் சம்பவங்களை கோர்வை படுத்தி…

வாழ்வின் வண்ணங்கள் 31 – கை.அறிவழகன்

கல்லூரிக்குப் போய்க்கொண்டிருந்த இரண்டாவது ஆண்டின் மத்தியில் கடுமையான டைஃபாய்டு காய்ச்சல் வந்து ஏறத்தாழ 15 நாட்கள் படுக்கும்படியானது, வீடு ஏதோ சிறைச்சாலையைப் போலவும் நண்பர்களும், அவர்களுடனான உலகமும் மகத்தானதாக உருவாகிக் கொண்டிருந்த காலம். கல்லூரிக்குப் போகிற இளம் வயதினருக்கு ஒரு புதிய மனவெழுச்சி உண்டாகிற தருணம் அது. புதிய மனிதர்கள், புதிய வாழ்வனுபவங்கள், என்று‌ நமக்குள் நாள்தோறும் வண்ணக்கலவையாக வாழ்வின் ரசங்கள்‌ ஊற்றப்பட்டு மனம் ஒரு புதிய தோற்றமெடுக்கும், அதுவரை‌ நாம் சார்ந்திருக்கிற வீடு என்பது‌ வெறும்…

நேரம் நல்ல நேரம் – 19 – ஆதனூர் சோழன்

கடந்த கால தவறுகளை களைய முடியுமா? நாம் செய்யும் தவறுகள் நமக்குள் வலியை உற்பத்திச் செய்யக் கூடும். கடந்த காலத்தில் நாம் செய்த தவறுகள் கூட அவ்வப்போது நம்மை வேதனையில் ஆழ்த்தக் கூடும். சரி, இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? மனோவியலாளர்கள் கூற்றுப்படி நாம் செய்யக் கூடியதும் சில உள்ளன. கடந்த காலத்தில் நாம் செய்த தவறுகளை அழித்துவிடவோ, மறையச் செய்யவோ முடியாது. ஆனால், நடந்த தவறுகளை மீண்டும் நினைவில் கொண்டு வந்து, அந்த தவறை…