Daily Archives: November 22, 2022

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – ஆதனூர் சோழன்

இது விண்வெளிக் காலம் விண்வெளி ஆராய்ச்சி பற்றி, தமிழில் வெளிவரும் முழுமையான முதல் புத்தகம் இதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். அறிவியல் நூல்களை தொடர்ந்து எழுதும் எனது முயற்சிக்கு ஊக்கம் அளித்தவர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள். எனது முதல் அறிவியல் நூலை ஆனந்த விகடன் இதழில் பாராட்டி எழுதியிருந்தார். அடுத்து வெளியிட்ட நூலையும் சிறந்த அறிவியல் நூல் என்று ஆனந்த விகடன் இதழில் தேர்வு செய்திருந்தார். இத்தனைக்கும் நாங்கள் இருவரும் சந்தித்தது கூட கிடையாது. அறிவியல்…

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 1

இடைக்காட்டுச் சித்தர் வகார வித்தை ரகசியம் சித்தர்கள் வாதவித்தையை ‘வகார வித்தை’ என்று குறிப்பிடுவர். ‘வ’ என்னும் எழுத்து ஆகாயத்தை குறிக்கும். ஆகாயம் என்பது தலையின் உச்சியையும் ஞானத்தின் முத்தி நிலையையும் குறிக்கும். ஞானத்தின் முக்தி நிலையை அடைய முனைவோர் வாதமுறையில் தயாரித்த மருந்தை மேற்கொண்டால் சித்தியாகும் அதன்பின் ஞானத்தை மேற்கொண்டால் சித்தியாகும் என்பதால் வகாரவித்தை என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டது. வாதத்தை ‘உலோக மாற்றுக்கலை’ என்றும் குறிப்பிடுவர் இதனை ‘இரசவாதம்’ வாதம் என்பர். பாதரசத்தை ஆதாரமாகக்கொண்டு தயாரிக்கப்படுகின்ற…

விந்தன் சிறுகதைகள் – 36

வேதாந்தம் …..கறார் கருப்பையா அன்றும் வழக்கம் போல் சர்க்காரைத் திட்டிக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்தார். “என்ன சர்க்கார் வேண்டிக் கிடக்கிறது? சுதந்திர சர்க்காராம், சுதந்திர சர்க்கார்; தேசம் சுதந்திரம் அடைந்தால் மட்டும் போதுமா? தூங்குவதற்குச் சுதந்திரம் வேண்டாமா? இத்தனை மணிக்குத்தான் கடையைத் திறக்க வேண்டும், இத்தனை மணிக்குத்தான் கடையை மூட வேண்டும், இன்ன கிழமைதான் கடைக்கு வார விடுமுறை விடவேண்டும் இதெல்லாம் என்ன திட்டம், என்ன சட்டம்? இதுவா வியாபாரத்திற்கு அழகு? இதுதான் போகட்டும் என்றால் மனிதனை…

வாழ்வின் வண்ணங்கள் 33 – கை.அறிவழகன்

மொழி புறவுலகின் சித்திரம் மட்டுமில்லை, மானுடர்களின் நெடிய வரலாற்றின் அகவுலகை சுமந்தபடி ஒய்யாரமாக வீற்றிருக்கும் பெருஞ்சிலை. அதன் ஊடாகப் பயணிப்பவர்களுக்கு சகலத்தையும் காட்சிப்படுத்தும் மாயக்கண்ணாடி. மொழி பிரபஞ்சத்தின் இருள் சூழ்ந்த கரும்பொருண்மையின் மீதும் வெளிச்சம் பாய்ச்சும் பெருஞ்சுடர். சாம்ராஜ்யங்களின் கோட்டைகள், எளிய மனிதர்களின் நம்பிக்கைகள், மாமன்னர்களின் வாள்முனைகள், முதல் விவசாயியின் ஏர்முனை, புலப்படாத கடவுளின் கண்கள் என்று எல்லாவற்றிலும் படிந்து கிடக்கிற எரிமலைக் குழம்பின் சாம்பல் மொழி. அதன்மீது ஏறி நின்று நான்தான் நம்பர் 1, நான்தான்…

வாழ்வியல் சிந்தனைகள் – 46 – ராதா மனோகர்

சிஷ்யர்களை தேடி வலை வீசும் சாமியார்கள்….. Atmospheric pollution is most harmless when compared to the spiritual and religious pollution that have plagued the world.There is no such thing as ‘knowledge’ for the sake of knowledge. Knowledge is power. “I know. You don’t know”. ug krishnamurthi அனேகமாக எல்லா சாமியார்களும் சமய வாதிகளும் உபதேசிகளும் குருமார்களும் பிரசாரகர்களும் அள்ளி வீசும் கருத்துக்கள்…

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 21 – ஆதனூர் சோழன்

பெண்களின் ஆரோக்கியத்துக்கு…(தொடர்ச்சி) இது முதல் வழி. பொதுவாக பெண்கள் பிறரைச் சார்ந்தே இருக்கிறார்கள். பிறருடைய தேவைகள், விருப்பங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார்கள். உங்களைச் சார்ந்திருக்க வேண்டும் என்று நினையுங்கள். உங்களுக்குள் முதலீடு செய்யுங்கள். அது உங்களு டைய ஆரோக்கிய உணர்வுகளை மேம்படுத்தும். அந்த உணர்வு கள் உங்களைச் சுறுசுறுப்பானவராக மாற்றும். தோற்றத்தை அழகாக்கும். சரி, உங்களுக்குள் முதலீடு செய்யுங்கள் என்றால் என்ன அர்த்தம்? உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று அர்த்தம். உதாரணமாக படிப்பதைத் தேர்ந்தெடுங்கள். ஏதேனும்…