Daily Archives: November 23, 2022

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 1 – ஆதனூர் சோழன்

மனிதன் செய்த குட்டி நிலவு ஸ்புட்னிக் (அக்டோபர் 04, 1957) யாரும் எதிர்பாராமல் நடந்தது அந்த அதிசயம். சோவியத் ரஷ்யா அந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது. உலகம் வியந்தது. அமெரிக்கா அதிர்ந்தது. தொழில்நுட்பத்தில் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்று அதுவரை மார்தட்டிக் கொண்டிருந்தது அமெரிக்கா. இரண்டு உலகப் போர்களைச் சந்தித்து, ஒரு உள்நாட்டு யுத்தத்தை சமாளித்து பாட்டாளிவர்க்க அரசு இந்தச் சாதனையை நிகழ்த்தியது. புவியீர்ப்பு விசையைத் தாண்டி விண்வெளிக்குள் நுழைய முடியும் என்று சோவியத் ரஷ்யா…

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 1

இடைக்காட்டுச் சித்தர் வகார வித்தை ரகசியம்(தொடர்ச்சி) இரும்பைப் பொன்னாக்கும் வாதரகசியம் இரும்பு 1 பங்கு, வெறுப்பான செம்பு 1 வராகன் தாளகம் 1 களஞ்சி காரம் 1 பங்கு, பூரம், வீரம், துருசு ஒரு பங்கு துத்தம் யங்கு கௌரி ஒரு பங்கு, வெடியுப்பு ஒரு பங்கு, சீனம் 1 பங்கு, லிங்கம் ஒரு பங்கு, நாகம் 1 பங்கு, சூதம் 1 பங்கு இவற்றை எருக்கம்பாலில் அரைத்து ஒளியில் காய வைத்தல் வேண்டும். பின்னர் தீமூட்டி…

விந்தன் சிறுகதைகள் – 37

மிஸ் நளாயினி-1950 …யார் வீட்டுக் கல்யாணப் பத்திரிகையைப் பார்த்தாலும் சரி, ‘’ராஜா!’’ என்று தம் மகனை உடனே அழைத்து விடுவார் ரங்கநாதம்-அன்றும் அப்படித்தான் நடந்தது. ‘’ராஜா!’’ “ஏன் அப்பா!” “எதிர்வீட்டு ராதையைப் பார்த்தாயா?” ‘இதென்ன அப்பா! உங்களுக்கு வேறு வேலை ஒன்று மில்லையா? எப்போது பார்த்தாலும் இவளைப் பார்த்தாயா, அவளைப் பார்த்தாயா என்று என்னைக் கேட்டுக் கொண்டே. இருப்பதுதானா வேலை?” “அதற்கில்லை ராஜா……!’ “எதற்கில்லை?” “அந்தப் பெண் பொழுது விடிந்து எத்தனை தரம் நம் வீட்டுக்கு வந்து…

வாழ்வின் வண்ணங்கள் 34 – கை.அறிவழகன்

அது ஒரு மழைக்காலத்தின் நண்பகல், கொஞ்சமாக மேகக்கூட்டங்களுக்கு இடையில் இருந்து ஈரவெயில் மரக்கிளைகளில் இருந்த துளிர் இலைகளில் படிந்திருந்தது. வெளிர் வானத்துக்குப் பின்னிருக்கும் மலைக்குன்றுகளை மேகக் கூட்டம் மறைத்திருந்தது. வழக்கமாக நாங்கள் பள்ளிக்கு இந்தப் பாதையில் தான் நடப்போம், அப்போது படர்ந்து கிடக்கிற கூர்மையான இலைகளைக் கொண்ட குறுஞ்செடிகளின் உள்ளாக ரத்தச் சிவப்பு நிறத்தில் கொத்துக் கொத்தாகக் கிடக்கும். ஈச்சங்காய்களை பறிப்பதற்கு வேகமாகப் போகிற தம்பியின் சட்டையைப் பிடித்து இழுத்து “மரியாதையாக நட, இல்லையென்றால் உதை வாங்குவாய்”…

வாழ்வியல் சிந்தனைகள் – 47 – ராதா மனோகர்

விரும்பாத trespassing? விரும்பாத வீட்டின் திறவுகோல் Trespassing என்பது பொதுவாக நாம் மற்றவரின் எல்லையை அனுமதி இன்றி மீறுவது என்று பொருள்படும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எல்லைகள் இருக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்வும் அவரது மனதிற்குள்ளும் மனதிற்கு வெளியேயும் இருக்கிறது. சக மனிதர்களை நாம் துருவி துருவி ஆராய்வது என்பது உண்மையில் ஒரு மோசமான அத்து மீறல் ஆகும். ஒருவரின் மன ஓட்டங்களை கூட ஓரளவுக்கு மேல் நாம் ஆராய்வது ஒருவகை trespassing என்று சொல்லலாம். இயற்கையில் சகல எண்ணங்களும்…

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 21 – ஆதனூர் சோழன்

பெண்களின் ஆரோக்கியத்துக்கு…(தொடர்ச்சி) இது ஆறாவது வழி. மனம் விட்டு சிரிப்பதாலும் உடற்பயிற்சிகள் செய்வதாலும் விளையும் பலன்கள் ஒரே மாதிரியானவை என்று சொன்னால் வியப்பாக இருக்கிறது அல்லவா? கைகளை ஆட்டி உடல் குலுங்கக் குலுங்கச் சிரியுங்கள். மனம் விட்டு சிரிப்பதால் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள கலோரிகள் கரைகின்றன. இயற்கையான வலி நிவாரணிகளை செயல்படத் தொடங்குகின்றன. மன அழுத்தத்தை குறைத்து, நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது. வயிறு குலுங்க சிரிப்பது, உங்கள் வேலையில் திருப்தியை ஏற்படுத்தும். சுயமதிப்பில் திருப்தியை…