Daily Archives: November 25, 2022

விந்தன் சிறுகதைகள் – 39

மறுமணம் அவள் போய் விட்டாள்-எவள் போய்விட்டாள்? தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை உயிருடன் மறந்து, “இனி நீயே கதி! என்று மணப்பந்தலில் பந்து மித்திரர்களுக்கு முன்னால் என் கரத்தை எவள், தன் மலர்க்கரத்தால் பற்றினாளோ, அவள்; வீடு, வாசல் ஒன்று ஏற்படுத்தி, ஏகாங்கியாக எங்கும் போகவிடாமல் எவள் என்னைத் தடுத்தாட் கொண்டாளோ, அவள்; எனக்கு நோய் நொடி வந்த போதெல்லாம் தனக்கே வந்து விட்டதாக நினைத்து அல்லும் பகலும் என் அருகிலேயே இருந்து எவள் எனக்குச் சேவை…

வாழ்வியல் சிந்தனைகள் – 49 – ராதா மனோகர்

அவன் ஏன் அற்புதம் ஏதும் நிகழ்த்தவில்லை? ஏதோ ஒரு காரணத்தால் அந்த அதிகப்பிரசங்கிக்கு தான் யார்? இறந்த பின்பு எங்கே போகிறோம்? கடவுள் என்று உண்மையில் ஏதாவது ஒன்று உண்டா என்பது போன்ற உதவாக்கரை கேள்விகள் அடிக்கடி எழுந்துகொண்டே இருந்தன. புரிந்தும் புரியாமலும் பல பல நூல்களை படிப்பது பலவிதமான குருஜிக்கள் போன்றவர்களின் தத்துவங்கள் எல்லாம் ஓரளவு நுனிப்புல் மேய்ந்து பார்த்தான். ஒரு சமயம் ஏதோ விளங்குவது போலவும் மறுபடி ஒன்றுமே புரியாமலும் காலங்கள் கழிந்தன. சம்பவம்…

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 2 – ஆதனூர் சோழன்

விண்வெளிக்கு சென்ற நாய் (நவம்பர் 03, 1957) சோதனைச் செயற்கைக் கோள் அனுப்பி ஒரு மாதம்தான். சோவியத் ரஷ்யா தனது இரண்டாவது செயற்கைக் கோளை அனுப்பியது. இந்தமுறை செயற்கைக் கோளில் லைக்கா என்ற நாய் பயணம் செய்தது. ஸ்புட்னிக்-2 என்று பெயரிடப்பட்ட அந்த செயற்கைக் கோள் முதல் செயற்கைக் கோளைக் காட்டிலும் எடை கூடியது. அது 508 கிலோ எடை இருந்தது. அதில் ரஷ்ய வகை பெண் நாயான லைக்கா பொருத்தப் பட்டது. பயணத்தின் போது, நாயின்…

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 1

இடைக்காட்டுச் சித்தர் வகார வித்தை ரகசியம்(தொடர்ச்சி) கறியுப்புச் சுத்தி முறைகள் உப்பைக்கடல் நீர் அல்லது மழைநீர்விட்டு கரைத்து வடிகட்டிக் காய்ச்சி குழம்பு பக்குவத்தில் இறக்கி வெயிலில் காயவைத்து தெடுக்க அவ்வுப்பு உறைந்த சுத்தியாகும். நாகபஷ்பம் சுத்திமுறைகள் நாகம் உருக்கு முகத்தில் சிறிது தீய்ந்து சிறு பொறியுண்டாம் சமயத்தில் இவ்விரண்டு குன்றிமணி (50 கிராம்) அளவு அபின் கொடுத்து தேய்த்து நன்றாய் ஊதிவிடபொரிபோலப் பூக்கும். அதை அரைத்துத் துணியில் வடிகட்டி உபயோகிக்கவும். மேற்படி தூறுக்கு சிறு அம்மான்பச்சரிசி துத்தி…