விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 3 – ஆதனூர் சோழன்
விண்வெளியில் தொலைந்த குரங்கு (டிசம்பர் 13, 1958) இரண்டே மாதங்களில் இரண்டு செயற்கைக் கோள்களை அனுப்பி உலகை வியக்க வைத்தது சோவியத் யூனியன். விண்வெளிக்குள் முதலில் நுழைந்த பெருமையையும், முதல் உயிரினத்தை விண்வெளிக்குள் அனுப்பிய பெருமையையும் சோவியத் யூனியன் கைப்பற்றியது. ஒருவகையில் இதை அவமானமாக கருதியது அமெரிக்கா. மிகக்குறுகிய காலத்தில் அறிவியலிலும் சோவியத் யூனியன் சாதனை நிகழ்த்தியதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவசரப்பட மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் கூறினாலும், ஸ்புட்னிக்-2 செயற்கைக் கோள் அனுப்பப்பட்ட அடுத்த…