விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 4 – ஆதனூர் சோழன்
விண்வெளியில் குரங்குகள் (மே 28, 1959) 1959ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி. புளோரிடாவில் உள்ள கேப் கேனவெரல் ஏவுதளத்திலிருந்து கூரிய மூக்கு கொண்ட ஏஎம்-18 என்ற ஜூபிடர் (ஏவுகணை) சீறிக் கிளம்பியது. அதன் நுனிப் பகுதியில் ஏபில், பேக்கர் என்ற இரண்டு அணில்வால் குரங்குகள் பொருத்தப்பட்டிருந்தன. பலத்த கண்காணிப்பு ஏற்பாடுகளுடன் அவை பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டன. ஜூபிடர் ராக்கெட் 300 மைல் தூரம் வரை விண்வெளிக்குள் சென்று பூமிக்குத் திரும்பியது. மணிக்கு 10 ஆயிரம்…