வாழ்வியல் சிந்தனைகள் – 62 – ராதா மனோகர்
நமது எண்ணங்களே நமது இயந்திரங்கள் எமது மனதில் ஒரு விருப்பம் தோன்றியவுடனேயே அதை பற்றி நாம் சிந்தித்து அதில்லயித்து இருப்பது அதை நிதர்சனமாக்கும் ஒரு அற்புதமான வழியாகும். அதை பற்றி கனவு காண்பதுவும் ஒரு மிக நல்ல நிச்சயமான மார்க்கமாகும். ஆனால் நாம் அதைபற்றி எண்ணுபோதே அது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்று எண்ணி கவலைப்பட தொடங்குகிறோம். அல்லது அந்த விருப்பம் நிறைவேற அதிகம் செலவாகுமே எனக்கு அது கிடைக்குமா? என்பது போன்ற எதிர்மறையான எண்ணங்களுக்கு நாம்…