Daily Archives: January 5, 2023

சிந்தனைக் களம் – 39 – Bamini Rajeswaramudaliyar

நீங்கள் படும் கஷ்டங்கள் உங்களை பலப்படுத்த வேண்டும். நீங்கள் பலப்படவில்லையானால், சுய இரக்கத்தில் ஆழ்ந்து விட்டீர்கள் என்பதை உணர்ந்து உங்களை திருத்திக் கொள்ளுங்கள். பட்ட கஷ்டங்கள் பலனைத் தர வேண்டும். அனுபவக் கல்வியாக எடுத்து முன்னேறினால், முள்ளாக குத்திய கஷ்டங்கள், மலர் பஞ்சனைபோல் ஆகிவிடும். உங்கள் பலயீனமே, பலயீனமானவர்களின் பலம். அங்கேதான் abuse உம் bullies உம் ஆரம்பமாகிறது. தன்மானமும் மனப்பலம் உள்ள மனிதர்கள் அடுத்தவரை நோக வைக்க முயல்வதில்லை. சிந்திக்கவும்! உங்களை நீங்கள் வலுப்படுத்திக் கொள்வதே…

வாழ்வியல் சிந்தனைகள் – 64 – ராதா மனோகர்

பகுத்தறிவு ஆன்மிகம் Rational Spirituality விஞ்ஞானக் கடவுள் நாம் யார்? கடவுள் உண்டா? எம்மை சுற்றி நடப்பது என்ன? இதில் எந்த கேள்வி உதித்தாலும் உடனடியாக கெட்டித்தனமான பதில்களை தர சகல சமயங்களும் வழிகாட்டிகளும் குருமார்களும் காத்திருக்கிறார்கள். எமது இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வது மிகவும் தித்திப்பான ஒரு காரியமாக அவர்கள் எதிர்கொள்கின்றனர். எமது கேள்விகளில் அவர்கள் உயிர் வாழ்கின்றனர். அவர்களை பின்பற்றுபவர்களுக்கு சொர்க்கம் காத்திருப்பதாக நம்பிக்கை. அளிக்கின்றனர் நாம் அவர்களின் பதில்களில் இருந்து தற்காலிகமான போதை…

வாழ்வின் வண்ணங்கள் 42 – கை.அறிவழகன்

தும்கூரிலிருந்து பெங்களூருக்கு வரும்போது NICE புறவழிச்சாலை வழியாக பயணிப்பது Driving இன் மீது நேசமுள்ள எவருக்கும் இதமளிக்கும் அனுபவமாக இருக்கும். 10-15 கிலோமீட்டர் அதிகமாக இருக்கும், 200 ரூபாய்க்கு குறையாமல் Toll கட்டணம். ஆனாலும் பலர் இந்த சாலையைப் பயன்படுத்துவதற்கான காரணம் பெங்களூர் நகரின் கடுமையான நெரிசல் மிகுந்த சாலைகள். ஒருவேளை நகருக்குள் நுழைந்து கடந்து வர வேண்டுமானால் Peak Hours இல் குறைந்தது 2 மணி நேரமாகும். இந்த சாலையில் வந்தால் 1 மணிநேரத்தில் பீன்யாவில்…

இலங்கை தமிழர் முகாம்களிடையே விழிப்புணர்வு ஒன்றுகூடல்

இந்தியாவின் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, மாநில அளவில், மறுவாழ்வு முகாம் மாணவர்கள், இளைஞர்கள் பங்குபெறும் விதமாக கலை இலக்கிய போட்டிகளை நடத்த இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு முகாம்களின் விழிப்புணர்வு குழு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்களிடம் வழங்கப்பட்ட கோரிக்கையில் கூறப்பட்டு இருப்பது… தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களான கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டு சார்ந்த தனித்திறன்கள்…