Daily Archives: January 6, 2023

தமிழ்நாடு என்றால் ஏன் கசக்கிறது? – சகாய டர்சியூஸ்

மெட்ராஸ்/சென்னை மாகாணம் என்பதில் இருந்து `தமிழ்நாடு` என்ற பெயர் சூடியது ஓர் வரலாற்று நிகழ்வு, சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணா விரதம் இருந்து தனது இன்னுயிரையே ஈந்து, பல அதிகாரத் தடைகளை தாண்டி பின் அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க அரசு மாநிலப் பொறுப்பேற்று இப்பெயர் மாற்றம் நடைபெற்றது. இவ்வாறு அதிகாரப் போராட்டம் கொண்டு வைக்கப்பட்ட `தமிழ்நாடு` என்ற பெயரை கேட்டாலே சிலருக்குக் கசக்கின்றது , வயிறு எரிகிறது, காரணம் கேட்டால், ஏன் தமிழ்நாடு மட்டும் தனியாக…

தேயிலைக்காரி – மலையக எழுத்தாளர் எஸ்தர்

5. மலையக பெண்களும் சுகாதாரப் பிரச்சனைகளும் மலையகம் என்றதும் பெரும்பாலானவர்க்கு கறிப்பாக ஏனைய பிரதேசங்களில் வாழ்பவர்கள் மலைநாட்டை நல்லதொரு சுற்றுலா தளமாகத்தான் பார்க்கிறார்கள். சிலுசிலுவென்று குளிரும் புதிதாக திருமணத்தில் இணைந்தவர்கள் தெரிந்தேடுக்கும் தேனிலவு பிரதேசமாகவும் பாடசாலை மாணவர்களுக்கான சுற்றுலா தளமாகவுமே மலைநாடு இன்றப் பார்க்கப்படுகின்றது. மலையகத்தில் தேயிலையும் இறப்பரும் பயிரிடப்படுகின்றமை யாவரும் அறிந்ததே. மேலும் பிரித்தானியர்களால் 1815ம் ஆண்டு கண்டி கைப்பற்றப்பட்ட பின்னர் மலைநாட்டை அவர்கள் ஒர பெருந்தோட்டமாக மாற்ற முனைந்து அதில் வெற்றிப் பெற்றனர். மேலே…

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 3

சுவாசக்கலை குறித்து இடைக்காடர் சித்தர் தொடர்ச்சி மனநிலை சூனியப்பட்ட நேரத்தில் யோகிகளும் சித்தர்களும் உடலையும் உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்த சிறுமூளையின் தொடர்பு கொண்ட செயலாற்றும்போது தாவரங்களின் மனதோடு தன் மனதைத் தொடர்புபடுத்தி பேசிக்கொண்டிருப்பார்கள். ஞானிகளும் யோகிகளும் பூமிக்கடியிலுள்ள அஷ்டமா உலோகங்களையும் நவரத்தினங்களையும் 32 பாஷாணங்களையும் 108 விதமான கற்களையும் பலவிதமான மண்களையும் மண்ணுக்கடியிலிருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் இருந்த இடத்திலேயே இருந்து ஆராய்ந்து கண்டெடுக்க ‘ஞானதிருஷ்டி’ என்னும் ஈர்ப்புத்தன்மையைப் பயன்படுத்தினர். இதேபோல ஆகாயத்தில் உள்ள சூரியன் சந்திரன் கிரகங்கள்,…

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 15 – ஆதனூர் சோழன்

வெள்ளிக் கோளின் வீணை நாதம் (டிசம்பர் 14, 1962) ஒருபுறம் நிலவை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போதே, மறுபுறம் வெள்ளிக் கோளுக்கு விண்கலத்தை அனுப்பியது அமெரிக்கா. மெரைனர் என்ற விண்கலத்தை அது அனுப்பியது. ஆனால், முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதைத்தொடர்ந்து, மெரைனர்-2 என்ற விண்கலத்தை அமெரிக்கா அனுப்பியது. 110 நாட்கள் பயணம் செய்த அது, 1962 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக் கோளை நெருங்கியது. வெள்ளிக் கோளை ஆய்வு செய்வது…