Daily Archives: January 9, 2023

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்…!!

மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத்தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும் அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது. நா வறாட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல் நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சைனைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற…

முதல் பெண் கப்பல்படைத் தளபதி!

பாரசீக மன்னரான ஸெர்ஸெஸ் கிரேக்கத்துக்கு எதிராக நடத்திய கடற்போரில் பங்கேற்று சிறப்பான பங்காற்றிய ஆர்ட்டிமிஸியாவை வரலாற்று ஆசிரியர்கள் கண்டபடி புகழ்கிறார்கள்.

கடலுக்கடியில் எரிமலை வெடித்தால் உருவாகும் குமிழ் எவ்வளவு பெருசா இருக்கும்?

உலகம் முழுவதும் கடலுக்கடியில் பல இடங்களில் உயிர்ப்புள்ள எரிமலைகள் ஏராளமாக இருக்கின்றன. பூமியின் மேற்பரப்பில் இருக்கிற எரிமலைகள் வெடித்தால் வெளியாகும் புகை மண்டலம் எவ்வளவு உயரத்துக்கு போகும் என்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், நீருக்கடியில் வெடிக்கும் எரிமலையின் புகை என்னாகும்? 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கடல்பயணம் செய்த சில மாலுமிகள் பிரமாண்டமான காற்றுக் குமிழ்கள் கடல் மட்டத்தில் மிதப்பதை பார்த்ததாக கூறியிருக்கிறார்கள். பல காலகட்டங்களிலும் இதுபோன்ற குமிழ்களை பார்த்ததாக மாலுமிகள் கூறினாலும் அது என்னவாக இருக்கும் என்பதை…

துயரத்தைச் சந்தித்தல்!

ஒரு துயரம்நம் வீட்டுப் படியேறும்போதுஎன்ன செய்வது? வாசலிலேயே ஆள்நிறுத்திவீ ட்டிலில்லை எனச் சொல்லலாம்ஏற்கெனவே வெளியூர் போய்விட்டதாகவும்ஊர்திரும்ப வெகுநாளாகும் எனலாம்‘உங்கள் சேதியைச் சொல்லுங்கள்வந்ததும் சொல்லிவிடுகிறேன்’என நைச்சியமாகக் கேட்டுப்பார்க்கலாம் கையிருப்புத் துயரங்களைக் காட்டலாம்இந்தப் பூஞ்சை உடல்- இனியும்துயரம் தாங்காதென மருத்துவரளித்தபரிந்துரைச் சீட்டை நீட்டலாம்நமது டூப்பை முன்னே அனுப்பிஏமாறுகிறதாவென சோதிக்கலாம் அடையாளம் தெரியாதபடிக்குமரு வைத்துக்கொண்டு நழுவிவிடலாம்அப்பாய்ண்ட்மென்ட் இல்லாமல்சந்திப்பதில்லையென கெடுபிடி செய்யலாம்உன் கூகுள் வெரிஃபிகேஷன் கோட் என்னஎனக் கேட்டு டபாய்த்துப் பார்க்கலாம் விலாசம் மாறிவந்துவிட்டாயெனபக்கத்துத் தெருவுக்கு ஆற்றுப்படுத்தலாம்காவல் நிலையத்துக்குத் தகவல் சொல்லிஅப்புறப்படுத்தப் பார்க்கலாம்ஒரு…