Daily Archives: January 10, 2023

ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மாணவர்களுக்கு கலை இலக்கிய போட்டிகள்

74வது இந்திய குடியரசு தினவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வுக்குழு நடத்தும் 2ஆம் ஆண்டு கலை இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விழிப்புணர்வுக்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது… 8ம் வகுப்பு முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள் கவிதை: எங்கள் வானம் எது? (அல்லது) விடியல் என்பது குடியுரிமை. கட்டுரை: நாங்கள் இந்தியர்கள் இல்லையா? (அல்லது) ஏன் தேவை இந்தியக்குடியுரிமை 11,12 மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுப்பிரிவினருக்கான போட்டிகள் கவிதை: வேறு தோட்டத்தில் பூத்த மலர்கள் (அல்லது) ஆயுள்…

உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் – 2.மைக்கேல் ஏஞ்சலோ

எல்லாக்காலத்திலும் போற்றப்படும் மகத்தான ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ. அவரது பெயர் ‘மகத்தான படைப்பு’ என்ற சொற்றொடருக்கு இணையானது. ஒரு ஓவியராக அவர் யாரோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாத அளவிற்கு தனித்தன்மை வாய்ந்த கலைஞனாக திகழ்ந்தார். அவர் தனது ஓவியங்களில் மனித வாழ்க்கையை விரிவாகவும் அழகாகவும் வெளிப்படுத்தினார். அவரது காலத்தில் வாழ்ந்த மற்ற ஓவியர்களை விட மைக்கேல் ஏஞ்சலோ மிகவும் மதிக்கப்பட்டார். மைக்கேல் ஏஞ்சலோ 1475, மார்ச் 6 ஆம் தேதி இத்தாலியின் மத்தியப்பகுதியான துஸ்கனியில் உள்ள கேப்ரஸேவில்…

உலகின் முதல் பெண் பிரதமர் காலத்துப் பஞ்சம்- எஸ்தர்

1971-1972 ஆண்டுகளில் இலங்கையில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் இடம்பெற்றது . இடதுசாரிகளின் அரசியல் செயல்பாட்டினால் மூடியபொருளாதாரத்தின் செயற்பாடுகள் இலங்கைக்கு உள்ளே நுழைந்தது. இதன் நிமித்தம் இன்றுவரை நிலம் இழந்த மக்களாகிய மலையக மக்கள் தான் இவ் இடதுசாராகளின் ஆட்சிக்காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களே. இந்தியாவில் உண்டான பஞ்சமும் உணவின்மையாலும் வெளியே தள்ளப்பட்ட தென்னிந்தியாவின் மக்கள் கூட்டம் பெரிய கங்காணிகளின் பசப்பு வார்த்தைளை நம்பி இலங்கைக்கு வந்தது இங்கேயும் பெரும் பொருளாதார சமூக அரசியல் சிக்கலில் மாட்டிக்கொண்டதோடு உணவைக்கூட…

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 16 – ஆதனூர் சோழன்

விண்வெளியில் முதல் பெண் (ஜீன் 16, 1963) இந்தச் சாதனையையும் சோவியத் ரஷ்யாதான் நிகழ்த்தியது. அந்த பெண்ணின் பெயர் வாலன்டினா டெரஷ்கோவா. 26 வயதான இளம் பெண். நெசவுத் தொழிலாளியான இவருக்கு ஒரு ஆசை. சோவியத் யூனியன் சார்பில் முதன்முதலாக யூரி காகரின் விண்வெளிக்குச் சென்று திரும்பியபோது உதித்த ஆசை. “நானும் விண்வெளிக்குச் செல்ல வேண்டும்” நெசவுத் தொழிலாளியான ஒரு பெண் இப்படி ஆசைப்படலாம். ஆனால் அது வேறு எந்த நாட்டிலாவது நிறைவேற முடியுமா? சோவியத் யூனியனில்…

திருவிளையாடல்!

எல்லா காலையையும் போலத்தான் இன்றைய காலையும் விடிந்தது. என்றைக்கும் போலவே செல்போனில் அலாரம் அடித்தபிறகும், ‘படு, பிறகு பார்க்கலாம்’ என குளிர் தலையைப் பிடித்து தலையணையில் அமுக்கியது. இனியும் படுத்துக்கிடக்க முடியாது என்ற நிலையில் எழுந்துகொண்டு மனைவி சமையலறைக்குள் நகர, நான் காய்கறி வாங்கிவர படியிறங்கினேன். சற்று நேரத்துக்குப்பின்தான் எல்லா நாளையும்போல இன்றைய காலை இருக்கப்போவதில்லை எனத் தெரியவந்தது. உலை வைத்துவிட்டு, காய்கறி நறுக்க அமர உட்கார்ந்தபோது மனைவிக்கு செல்போனை சார்ஜ் போடவேண்டுமென்ற ஞானோதயம் வந்தது. வழக்கமாக…

அதிசய சிலந்தி வலைக் கூடாரம்!

சிலந்தி வலை கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன சிலந்திவலைக் கூடாரம்? அமேஸான் காடுகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் அலைந்து திரிந்து இந்த மிகச்சிறிய வெண்பட்டு வலைக் கூடாரத்தை கண்டுபிடித்திருக்கிறார் புகழ்பெற்ற வனவியல் நிபுணர் டொரெஸ் பில். சமீபத்தில் இவர் பெரு நாட்டுக்கு சென்றார். அங்கு பரவியுள்ள அமேஸான் காடுகளுக்குள் இவர் ஆய்வு நடத்தினார். அப்போது, ஒரு இலையில் இந்த மிகச்சிறிய வலைக்கூடாரம் இருப்பதை கண்டுபிடித்தார். பிரிட்டனில் ஆதி மனிதர்கள் மிகப்பெரிய கற்களால் கட்டிய கல்மேடைக்கு நிகராக இதை பட்டுக்கூடாரம்…

நகாசு வேலைகள் செய்யப்பட்ட பொன்னணியைப் போல

தன் பிள்ளைகளிடமிருந்தோ கணவனிடமிருந்தோ அண்டை அயலிடமிருந்தோ அவளுக்கு எப்படியும் வாய்த்துவிடுகிறதொரு துயரம் தன் துயரத்தை நகாசு வேலைகள் செய்யப்பட்ட பொன்னணியைப் போல அவள் அணிந்திருக்கிறாள் தெரிந்தவர்கள் அறிமுகமானவர்கள் அனைவருக்கும் அதை காட்டிக் காட்டி நிறைகிறாள் சொல்லொன்றைப் பற்றவைத்து, அதன் வெம்மையில் மீள மீள தட்டியடுக்குகிறாள் துயரங்களின் புதுப் புது ரூபங்களை துயரங்களின் அனந்த ரூபங்கள் வரிசையில் காத்திருக்கின்றன அவளை தரிசித்து மகிழ. துயரம் வாய்க்காத நாளொன்றில் அவளை எதிரிட்டவர்கள், ஆபரணங்களை அணிவிக்காதுவிட்ட மூளிச்சிலையென அவள் கோலம் உறுத்துவதாய்…