Daily Archives: January 11, 2023

உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் – 3.ரஃபேல்

இவரும் இத்தாலி நாட்டு ஓவியர்தான். மறுமலர்ச்சி காலத்தைச் சேர்ந்த ஓவியர்களில் ரஃபேலுக்கு தனி இடம் இருக்கிறது. இவரது முழுப்பெயர் ரஃபாயிலோ சான்சியோ. நவீனத்துவம் இவருடைய சிறப்பு. மிகப்பெரிய உருவங்களை வரைந்ததற்காக வாடிகனில் மிகவும் புகழ்பெற்றவர். இவருடைய நேர்த்தியான வேலைகளுக்காக நேசிக்கப்படுகிறவர். ஜியோவனி சான்டி மற்றும் மாகியா டி பாட்டிஸ்டா சியார்லா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய தாயார் 1419ல் இறந்தார். ரஃபேலின் தந்தையும் ஓவியர். ஓவியம் பற்றி ரஃபேலுக்கு கற்றுக்கொடுத்த முதல் ஆசிரியர் இவர்தான். இவர் 1494ல்…

வேலையும் உடல்நலமும்

உங்களின் இருக்கை முறைப்படி வடிவமைக்கப்படாததாக இருந்தால், நீங்கள் 6 முதல் 8 மணி நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு முதுகுவலி, மணிக்கட்டு வலி உள்ளிட்ட பிரச்சினைகள் வரிசை கட்டி வரும். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அதை உணர்வது அரிதே, இந்தியர்களில் 43 சதவீதம் பேர் பணிபுரிபவர்கள். எனவே அலுவலக பாதிப்புகளை நாம் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார், அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஆக்குபேஷனல் ஹெல்த் இயக்குநர் பி.கே. நாக். நாள் முழுவதும் உட்கார்ந்து…

பெரிய கோவிலில் தமிழ் வெல்லுமா?

தமிழனின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழில்தான் நடத்தவேண்டும் என்பதற்கே தமிழர்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பெரிய கோவிலை ராஜராஜசோழன் கட்டி முடித்து குடமுழுக்கு நடத்த திட்டமிட்டபோது, அவனைச் சுற்றியிருந்தவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக சமஸ்கிருத மந்திரம் ஓதி குடமுழுக்கை நடத்திவிட்டார்கள். இது, ராஜராஜனின் குருவான கருவூரார் சித்தருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர் ராஜராஜனை சபித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு…

ஒரு முழுப் பகலையும்

இந்தக் கோடை ஒரு முழுப் பகலை சுடச்சுட பொறித்து முன்னே வைக்கிறது பிட்டுத் தின்னும் ஆசையில் கைவைத்துவிடாதீர் அது ஆறுவதற்கு இன்னும் வெகுநேரம் இருக்கிறது! இந்தக் கோடை வழிப்பறிக் கொள்ளைக்காரனைப் போல வந்தது என்றான் அவன் போதாதற்கு நதி கொள்ளை போனதெப்படியென அபிநயம் பிடித்துவேறு காட்டுகிறான் இல்லையில்லை பசித்த புலியைப் போல வந்ததெனச் சொல்லி கிணறுகளையும் ஊற்றுகளையும் கழுத்தில் கவ்வி வெயில் இழுத்துச்சென்றதை கால்நடுங்க விவரிக்கிறான் வேறாருவன் ஏளனச் சிரிப்புடன் மறுக்கும் முதியவர் பொழுதுபோக்க வந்த உல்லாசக்காரன்போல்…