Daily Archives: January 19, 2023

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 4

யோக சமாதி சாதனைகள் தொடர்ச்சி கூர்மம் என்றபெயருடைய நாடியில் ஸம்யமம் செய்யும்போது மனதை நடுங்காது நிலைத்து நிற்கச் செய்யமுடியும். கூர்மநாடியானது ஆமை வடிவில் இருக்கும் நாடியானதால் இப்பெயர்பெற்றது. இது தொண்டைக்குழிக்கு கீழே அமைந்திருக்கிறது. இதில் ஸம்யமம் செய்து வந்தால் மனம் அசைவின்றி நிலைபெற்று சுகம் பெறலாம் மரண்தை வென்ற சித்தர்கள் இப்படி எத்தனையோ சித்து விளையாட்டுகளை உலகுக்குதந்தள்ளனர். மண்ணுலக வாழவின் முற்றுப்புள்ளி மரணம் எனப்படுகிறது. மரணத்தின் பின்பு மனிதநிலை பூவுலகமாந்தர் அறியமுடியாத திரைமறைவு இயக்கமாகத் தொடங்கித் தொடர்கிறது…

கத்திரிக்காய்

கத்தரிக்காயில் பலவிதமான மாறுபட்ட வண்ணங்கள் உண்டு என்றாலும் சத்து என்னவோ அனைத்திலும் ஒன்றுதான். எப்போதுமே சமையலுக்கு பிஞ்சு கத்தரிக் காய்கள் தான் சிறந்தவை. முற்றிய கத்தரிக்காயை அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கு வரும். தற்காலத்தில் விதையே இல்லாத கத்தரிக்காய்களையும் கண்டுபிடித்து உள்ளனர். இதைக் கொண்டு சீக்கிரம் சமையல் செய்து விடலாம். கத்திரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போன்ற பிரச்சினைகள் அகன்று விடும். அதனால் தான் பத்திய…

நாய்களின் பின்னோடும் புலிகள் – ஆதனூர் சோழன் கவிதைகள்

மருதநிலம் நிலைமறந்து பாலையிடம் கையேந்தும்சருகுகளின் அழகினிலே கொழுந்துகளும் மனம்மயங்கும்எரிமலையின் அடிவயிற்றைமின்மினிகள் கிள்ளிப்பார்க்கும்உரித்தொங்கும் வெண்ணெய்க்குபசுக்களிங்கே தவமிருக்கும்மிகைவீரம் குருதியிலே கொப்புளித்தும் – தாம்பிழைக்கபகையாளர் பாதங்களில் சிரம் தாழ்வோர், அவர்கள்… வான்கோழி நடம்ரசிக்கும் மயில்கள்கிளிஞ்சல்களின் ஒளிபுகழும் முத்துக்கள்நாய்களின் பின்னோடும் புலிகள்.

நிலவில் ஒரு மோதல் (மார்ச் 24, 1965) – History of space exploration

1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி அமெரிக்கர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம். அமெரிக்கா அனுப்பிய ரேஞ்சர்-9 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதியது. அந்த மோதல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. விண்கலத்தில் போர்த்தப்பட்ட விசேஷமான கேமராக்கள் இதை சாத்தியமாக்கின. 15 நிமிடங்கள் இந்த மோதல் படிப்படியாக ஒளிபரப்பானது. நிலவின் மேற்பரப்பில் மோதும்வரை தொடர்ச்சியாக படங்கள் ஒளிபரப்பாயின. நிலவின் மேற்பகுதி இளகுவாக இருக்கும் என்று கருதப்பட்டது. விண்கலங்கள் அங்கு பத்திரமாக இறங்க முடியாது, மனிதர்கள் நடமாட முடியாது என்றெல்லாம் யூகங்கள்…

உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் – 5.போட்டிசெல்லி

இவரும் இத்தாலி நாட்டு ஓவியர். போட்டிசெல்லியின் வாழ்க்கைக் கதை குறித்து விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால், இத்தாலியைச் சேர்ந்த பிளாரன்ஸ் நகரில் 1445 ஆம் ஆண்டு பிறந்தார். மாதம் தேதிகூட தெரியவில்லை. இவருடைய ஓவியங்கள் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் அங்கீகாரம் பெற்றன. 14 வயதில் ஓவியப் பயிற்சியாளராக சேர்ந்தார். இவருடைய சமகால ஓவியர்களைக் காட்டிலும் கூடுதல் கல்வியறிவு பெற்றிருந்தார். தொடக்கத்தில் இவர் தனது மூத்த சகோதரர் ஆண்டோனியாவுடன் தங்கநகைத் தொழிலாளியாக வேலை செய்தார். 1462ல்தான் ஃப்ரா ஃபிலிப்போ…

வாழ்வின் வண்ணங்கள் 44 – கை.அறிவழகன்

ஒரு கோடை காலத்தின் நண்பகலில் தாத்தா வந்து சேர்ந்தார், கஞ்சி போட்டு இஸ்திரி செய்த மொடமொடவென்றிருந்த அவரது ஜிப்பாவும், கையிடுக்கில் வைத்திருந்த அவரது தோல்பையுமாக நடந்து வந்தவர் அரக்கு நிறத்திலான தனது காலணிகளைக் கழற்றி விட்டு “நல்ல வெயிலம்மா” என்றார். அம்மா துவைத்த துணிகளைப் பாதியில் போட்டுவிட்டு சைலைத்தலைப்பில் கைகளைத் துடைத்தபடி வந்து “சாப்பிடுறீங்களாப்பா” என்று சொல்லி முடிக்கவும் “சாப்பிட்டுத்தாம்மா வந்தேன்”. தாத்தா இப்போது உலோக நாற்காலியில் அமர்ந்து கொண்டார். நாற்காலியின் ஒருபக்கம் இறங்கி டக்கென்று ஒலி…