Daily Archives: January 21, 2023

பூமிக்குத் திரும்பிய விண்கலம் (ஆகஸ்ட் 29, 1965) – History of space exploration

விண்கலம் ஒன்றில் 8 நாட்கள் பூமியைச் சுற்றிய இரண்டு அமெரிக்க வீரர்கள் விண்கலத்துடன் பத்திரமாக பூமிக்குத் திரும்பினார்கள். அமெரிக்க விஞ்ஞானிகள் ஜெமினி-5 என்ற விண்கலத்தை உருவாக்கினர். அதில் சார்லஸ் கோன்ராடு, கார்டன் கூப்பர் என்ற இரு விண்வெளி வீரர்கள் பயணம் மேற்கொண்டார்கள். இருவரும் பூமியை 120 முறை சுற்றி வந்தார்கள். மொத்தம் 53 லட்சத்து 31 ஆயிரத்து 745 கிலோ மீட்டர்கள் பயணம் செய்தார்கள். அதுவரை இருந்த சாதனையை இருவரும் முறியடித்தார்கள். 8 நாட்கள் தங்கியிருந்த அவர்கள்…

சிந்தனைக் களம் – 43 – Bamini Rajeswaramudaliyar

தீபனின் வாழ்வில் தீபனின் அம்மாவாகிய நானும் அவனின் ஓட்டிசமும் பிள்ளைகளை பெற்று நல்ல பண்பு, பழக்கவழக்கங்கள், கல்வி எனக் கற்றுக் கொடுத்து, அத்துடன் பறப்பதற்கான தன்நம்பிக்கை என்ற அழகிய சிறகினையும் கொடுக்கும் போது எமது கடமை நிறைவேறுகிறது. அப்படித்தான் தீபனைப் பற்றி உணர்கிறேன். தீபன் supported independent living ற்கு போய் பல வருடங்களாகிவிட்டது. ஆரம்பத்தில் வலியை தந்த பிரிவு இப்போது பழக்கப்பட்டு விட்டது. தீபனின் வாழ்வு busyயானதாக இருப்பதால் கிழமையில் ஒருமுறைதான் தீபன் என்னை காண்பதற்கு…

விந்தன் சிறுகதைகள் – 45

சிறைப் பறவை ‘’திருடுவதென்பது அவ்வளவு எளிதல்ல; அதிலும் எத்தனையோ தொல்லைகள் இருக்கத்தான் இருக்கின்றன” மூன்று முறைகள் சிறைவாசம் செய்த பிறகு இந்த முடிவுக்கு வந்தான் முத்து. அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு திருடவேண்டும்; அகப்பட்டுக்கொண்டால் அடி, உதைக்குத் தயாராக அதற்கு வேண்டும் – மேல் விசாரணை, தண்டனை எல்லாம்! விசாரணை என்றால் என்ன விசாரணை? – ‘ஏன் திருடினான், எதற்காகத் திருடினான்?’ என்றா விசாரிக்கிறார்கள்? அப்படி விசாரித்தால்தான் பெரும்பான்மையான வழக்குகளில் அரசாங்கமே குற்றவாளியாகி, குற்றவாளி நிரபராதியாகி விடுவானே?அதனால்தான் ஒருவன்…

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 13 – ராதா மனோகர்

13. எல்லை கிராமங்கள்… கைமாறும் பட்டயம் பாலாவோரையின் எல்லை கிராமங்களில் வழுக்கியாற்று பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. வழுக்கியாறு சீரமைக்கப் பட்டதும் வயல்களுக்கு நீர் வரத்து அதிகமாக இருக்கும். பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று போனதால் பல வாய்க்கால்கள் உருத்தெரியாமல் அழிந்து போயிருந்தன. அவற்றை செப்பனிட வேண்டிய தேவை இருந்தது. ஏற்கனவே பலதடவை குலதிலகனின் அரசவைக்கு முறை யிட்டும் அரசரோ, அவனது அமைச்சர்களோ எதுவித உருப்படி யான பணிகளுக்கும் செவி சாய்க்கவில்லை. இறுதியில் அங்கு வசிக்கும் குடிமக்கள் பாலாவோரை பணிமனைக்கு…

திராவிடத்தால் வாழ்கிறோம் 1 – கோவி.லெனின் + சொக்கலிங்கம்

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று ஒரு தற்குறி கூட்டம் ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கும் நிலையில், திராவிடத்தால் வாழ்ந்தோம் என்று அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். பிஞ்சு நெஞ்சில் விஷ வித்துக்களை தூவினால் அதுவே விருட்சமாக வளரும் என்ற அபாயத்தை கடந்த காலத்தில் உணராமல் விட்டோம். ஆனால், இப்போது, சமூக வலைத்தளங்கள் பெருகி இலவசமாக விஷத்தை விதைக்கும் வாய்ப்புகள் பெருகியுள்ள நிலையில், அவற்றை மறுத்து, திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக,…