விந்தன் சிறுகதைகள் – 46
திருப்தி நண்பர் நட்-‘நட்’டாவது, ‘போல்’டாவது என்று நினைக்காதீர்கள்! ‘நடேசன்’ என்ற பெயரைத் தான் ‘நட்’ என்று ‘ரத்தினச் சுருக்க‘மாகச் சுருக்கி வைத்துக் கொண்டிருக்கிறார் நண்பர். காரணம், தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழில் கவிதை எழுதுவதை அகௌரவமாக எண்ணி, அவர் ஆங்கிலத்தில் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டது தான்! இதனால் ஆங்கில நண்பர்கள் மட்டுமல்ல; ஆங்கில நாணயங்களான பவுன், ஷில்லிங் பென்ஸும் அவருக்குத் தாராளமாகக் கிடைத்து வந்தது. எனினும், அந்த நோபல் பரிசை-உலகம் முழுவதும் ஒரே நாளில் தன்னை அறிமுகப்படுத்தி வைத்து…