வாழ்வின் வண்ணங்கள் 46 – கை.அறிவழகன்
ஒரு புத்தகத்தை வாங்கியவுடன் அதை எழுதிய மனிதன் என்னுடன் சேர்ந்து நடக்கத் துவங்குவதாக நான் நம்புகிறேன். அதை வாசிக்கத் துவங்கும் போது அந்த மனிதனின் நிலத்தில் இறங்குகிறேன். பிறகு கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாக என்னைச் சுற்றி நடப்பார்கள், அவர்கள் எனது மனசாட்சியோடு உரையாடுவார்கள். சிலருக்கு உரையாடுவது பிடிக்காது அல்லது தெரியாது. ஆனால் அவர்கள் மெல்ல ஆழ்மனதில் இறங்கி மிக நெருக்கமாக என்னை முத்தமிடுவார்கள். அவர்களில் சிலரோடு நான் சண்டை பிடிப்பேன், சிலரைக் காதலிக்கத் துவங்குவேன். சிலர் நெருக்கமாக நம்மோடு…