வாழ்வின் வண்ணங்கள் 47 – கை.அறிவழகன்
மானுட நினைவில் தேங்கிக் கிடக்கிற கடலைப் போலவே பெண்ணும் பிரம்மாண்டமாக பூமியெங்கும் நிறைந்து கிடக்கிறாள், கடந்து போகிற பெண்களின் கணப்பொழுது சிரிப்பில் நிலமும், மரங்களும், சிகரங்களும் காற்றைத் கண்டு சிலிர்த்துக் கொள்வதைப் போல மனம் பூரிப்படைகிறது. பேரண்டத்தின் கல்லறையாய் கணக்கிலடங்காத புதைகுழிகளின் கூடமாய் இருக்கிற பூமியில், நம் கூட வாழ்கிற பெண்களின் நிழலில் இருந்து தான் தினந்தோறும் தளிர்க்கும் சின்னஞ்சிறு இலை போல மானுட வாழ்க்கை தழைத்திருக்கிறது. இலக்கியப் பெண்களில் நெஞ்சில் நிலைத்த பல பாத்திரங்கள் இருந்தாலும்,…