கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 16 – ராதா மனோகர்
கண்ணீரை சுமந்து வந்த வெற்றி! பாலவோரை எங்கிலும் ஒரு சகிக்க முடியாத அமைதி குடி கொண்டிருந்தது. அரசன் நிலையோ என்னவென்று அவனுக்கே தெரியாத நிலையில் மக்களுக்கு என்ன தெளிவு கிடைக்கும்? மழை ஒய்ந்து விட்டது. கோவில் கட்டுமானம் வேலைகளை புறந்தள்ளி விட்டு ஏராளமான பணியாளர்கள் அரண்மனையை செப்பனிடும் அதிசய காட்சி அரங்கேறி கொண்டிருந்தது. பணியாட்கள் அரண்மனையை செப்பனிடுகிறார்களா அல்லது குப்புற கவிழ்க்கிறார்களா என்று ஊர் மக்கள் தமக்கு பேசிக் கொண்டனர். அரசன் குலதிலகனோ ஒரு நிரந்தர மயக்க…