Author ஆதனூர் சோழன்

பெண் வாழ்க்கை – கை.அறிவழகன்

அம்மா எப்போ தூங்குவான்னு தெரியாது. காலைல எந்திரிச்சுப் பாத்தா சாமி படத்துக்கு முன்னாடி நின்னு கண்ண மூடிக்கிட்டு நிப்பா. வாய் மட்டும் முணுமுணுக்குறது தெரியும். சாமிக்கிட்ட என்ன வேண்டுவான்னு தெரியாது. அநேகமா ஊர்லயே சாமிக்கிட்ட அதிக நேரம் பேசுறது அம்மாவாத்தான் இருக்கும்…… கோயில் பூசாரி கூட சாமியவிட மத்தவங்ககிட்டத்தான் அதிக நேரம் பேசிப் பாத்திருக்கேன். கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கு மேல அம்மாவும் சாமிகிட்ட ஏதோ வேண்டிக்கிட்டேதான் இருக்கா. ஆனா, அவ வாழ்க்கைல வேண்டுறது எதுவும் நடந்த மாதிரித்…

மருத்துவத்துறையில் இட மாறுதலுக்கு உலவும் ரேட் கார்டுகள் – Ravishankar Ayyakkannu

ஆவின் பால் ஒரு லிட்டர் 40 ரூபாய் என்பது போல், தமிழ்நாட்டின் சுகாதாரத் துறையில் சில rate cardகள் உலவி வருகின்றன. செவிலியர் இட மாற்றம் – 3 முதல் 4 லட்சம் மருத்துவர் இட மாற்றம் – 5 முதல் 6 லட்சம் மருத்துவர் Deputation – 6 முதல் 8 லட்சம். சென்ற அதிமுக ஆட்சியில் ஒட்டு மொத்தமாகவே அனைத்து இட மாறுதல்களும் இலஞ்சம் வாங்கிக் கொண்டு தந்தார்கள். இந்த ஆட்சியில் வெளிப்படையாக கலந்தாய்வு…

முதுமையும் சுய‌ம‌ரியாதையும் – Fazil Freeman Ali

ப‌ல‌ முறை போல‌ந்து வ‌ந்திருக்கிறேன், ஒரே வ‌ருட‌த்தில் மூன்று முறை வ‌ந்த‌தெல்லாம்கூட‌ உண்டு. ஜோன்னாவுக்கு எப்போதுமே இது visiting back home, என‌க்கோ ஒவ்வொரு முறையும் விடுமுறைதான். எங்க‌ள் விமான‌ம் எப்போதும் த‌ரையிற‌ங்குவ‌து கிடானான்ஸ்க் (Gdansk) ந‌க‌ர‌த்தில். அங்குதான் ஜோன்னாவின் இளைய‌ ச‌கோத‌ரி மீர்க்க‌ல‌வ்சிகா வீடு. நாங்க‌ளே ஒரு டாக்சி எடுத்து வீட்டுக்கு வ‌ந்துவிடுகிறோம் என்றாலும் கேட்காம‌ல் எப்போதும் ஏர்ப்போர்ட்டுக்கு வ‌ந்துவிடுவார் இந்த‌ பாச‌க்கார‌ முன்று குழ‌ந்தைக‌ளின் தாயார். இங்கு சில‌ நாட்க‌ள் த‌ங்கிவிட்டு மால்போர்க் (Malbork)…

விந்தன் சிறுகதைகள் – 8

கவலை இல்லை அந்த ஊரில் அரியநாயகத்தின் செருப்புக்கடைதான் பேர் போன கடை. சொற்ப முதலுடன் ஆரம்பித்துச் சீக்கிரத்திலேயே பெரிய செருப்பு வியாபாரியானவன் அரியநாயகம். அவனிடம் தான் காத்தான் தினசரி செருப்புத் தைத்து லாபத்துக்கு விற்று வயிறு வளர்த்து வந்தான். காத்தானிடமிருந்து முக்கால் ரூபாய்க்கு வாங்கிய செருப்பை மூன்றரை ரூபாய்க்கு விற்றுச் சம்பாதித்த லாபத்தைக் கொண்டு தான் அரியநாயகம் தன்னுடைய டாம்பீக மான வாழ்க்கை கையை நடத்திவந்தான். காத்தானுக்கு ஒரே ஒரு பெண். அவளை அவன் கானாற்றில் கட்டிக்…

சிந்தனைக் களம் – 6 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

தான் பேசும் வார்த்தைகளை தன் காதுகள் செவிமடுக்க, மூளை கிரகிக்க, இதயம் அதன் தன்மையை உணர ஆரம்பிக்கும் போது மனிதன் தன்னைத்தான் உணர்ந்து, மனிதன் மனிதனாக முமுமையடைய ஆரம்பிக்கிறான். அங்கேதான் நான் நேர்மையான மனிதன் என்ன அழகான உணர்வு ஆரம்பமாகிறது. அது பல உன்னதமான பயணத்திற்கு வழிகாட்டியாக மாறுகிறது. நேர்மை உண்மையுடன் புத்திசாலித்தனம் வேண்டும். அல்லது ஏமாற்றங்களும் வலிகளுமே மீதமாகும். என்னால் கஷ்டப்பட முடியாது அதனால் நேர்மையாக வாழ முடியாது என்பதை விட, உங்கள் உலக அறிவை(…

இந்திய ஒப்பந்த வரலாறு – 10 – அமரர்.அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

10.வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மொழிவாரி அரசாக அமரர் .அ.அமிர்தலிங்கம்: டெல்லி உடன்படிக்கை! இந்த இருதலைவர்களின் மறைவினால் எமக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஏற்பட்டதென்பதை யாரும் மறுக்க முடியாது. யாழ்ப்பாணத்தில் நாளுக்கு நாள் நடை பெறும் சம்பவங்களை எமக்கு ஒவ்வொரு நாளும் தொலை பேசியில் கொடுத்துக் கொண்டிருந்தவர் திரு. ஆலாலசுந்தரம். எமக்கு மாத்திரமின்றி உலக மக்கள் தொடர்புச் சாதனங்களுக்கெல்லாம் யாழ்ப்பாணத்தில் செய்தி நிலையமாக விளங்கியவர் ஆலாலசுந்தரம் என்று இக் கொலைச் செய்தியைப் பிரசுரித்த இங்கிலாந்து…

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 11 – ராதா மனோகர்

11. திராவிட தேசங்களை வெற்றி கொண்ட செருக்கு வழுக்கியாற்றை வேடிக்கை பார்க்க போய் புத்தூர் நம்பியிடம் பிடிபட்ட பார்பனர்கள் பற்றிய செய்திகள் எதுவும் வெளி உலகிற்கு தெரியவில்லை. ஒரு மாளிகையில் கைதிகளாக ஆனால் போதிய வசதிகளோடு தடுத்து வைக்கப்பட்டார்கள். இனி தொடர்ந்து பிடிபடப்போகும் பார்பனர்களுக்கும் சேர்த்து பெரிய அளவில் சில கரந்துறை காப்பகங்கள் பாக்கியத்தம்மாளின் ஆலோசனைப்படி புத்தூர் நம்பியால் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது. பாலாவோரை மக்களை ஆழம் பார்க்கவென கிளம்பிய பல பார்ப்பனர்கள் திடீர் திடீர் என்று காணமல்…

இணையதளத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துங்கள் – திமுக ஐ.டி. விங் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி, செப்டம்பர் – திராவிட மாதத்தையொட்டி ஒருங்கிணைத்த ட்விட்டர் ஸ்பேசஸில் கலந்து கொண்டு வெள்ளிக்கிழமை 30-09-22 ஆம் தேதி ‘திராவிட அரசு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அதன் விவரம் பின்வருமாறு, செப்டம்பர் மாதத்தை திராவிடர் மாதம் என்று தலைப்பிட்டு, இணைய வழி கருத்தரங்குகளை ஏற்பாடு செய்திருக்கிற, தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் – சட்டமன்ற உறுப்பினர் தம்பி டி.ஆர்.பி. ராஜா அவர்களையும், தகவல் தொழில்நுட்ப அணியின் பல்வேறு பொறுப்பாளர்களையும் முதலில் வாழ்த்துகிறேன். தலைவர்…

யார் இந்தப் பொன்னியின் செல்வன்கள்? – Marx Anthonisamy

’பொன்னியின் செல்வன்’ நாவல் மற்றும் அந்தத் தொடர் நாவலை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி பற்றி அந்தப் பெயரில் திரைப்படம் தயாரிப்பவர்கள், அதற்கு வசனம் எழுதியுள்ள ஜெயமோகன் வரை ஆய் ஊய்ன்னு அடிக்கிற லூட்டி தாங்க முடியவில்லை. இன்று என்னிடம் ஒருவர், “சார்! இந்த ராஜ ராஜ சோழன்தான் அந்தக் காலத்துல நாகப்பட்டுணத்துல சூடாமணி விகாரைன்னு புத்தருக்கு கோயில் கட்டிக் கொடுத்தாராமே…” எனப் படு சீரியசாகக் கேட்டார். ஏதோ ராஜராஜ சோழன் பௌத்தத்தை எல்லாம் ஆதரித்தவன் போலவும், மத…

எம்ஜியாரின் வார்த்தைகளை மறந்த அதிமுக தலைவர்கள்

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் டெல்லியில் தன்னிடம் நடந்து கொண்ட முறை பற்றி 17-2-1983 ல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எம்.ஜி.ஆர். கூறிய வார்த்தைகளை அதிமுக தலைவர்களே மறந்துவிட்டார்கள். அதை மீண்டும் இந்தச் சமயத்தில் நினைவூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. சமூகவலைத்தளங்களில் பரவலாக பகிரப்படும் இந்த பதிவு அதிமுகவை ஆதரிப்போருக்கும், ஆர்எஸ்எஸைசை ஆதரிக்கும் அதிமுகவினருக்கும் சமர்ப்பணம். பத்திரிக்கையாளர் கேள்வி – ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் தடை செய்யப்படுமா? எம்.ஜி.ஆர் பதில் – “டெல்லியில் நேற்று நான் தமிழ்நாடு மாளிகையில் இருந்து மத்திய மந்திரிகளைப் பார்க்கப் புறப்பட்ட…

பார்ப்பனரும் சூத்திரரும் சமமா? – நீங்களே பாருங்களேன் – வன நீலி

எத்தனை நூற்றாண்டுகளாய் எங்கள் கதைகளும் சினிமாக்களும் உங்கள் அக்ரஹாரத்தையே சுற்றி வந்தன என்று… அப்பளமோ, வடகமோ, புளியோதரையோ, பில்டர் காஃபியோ உங்கள் பெயரை வைத்ததால்தான் வாங்கிச் சாப்பிட்டோம்… எங்கள் நிறம் மறந்து வெள்ளை நிறம்தான் அழகின் அடையாளம் என்றோம்… தமிழைத் திக்கித் திக்கிப் பேசும் அயல் மாநிலத்தவரையும் உங்களையும் ஆஹோ ஓஹோ என்றோம்… கட்டிய மனைவியை சந்தேகப் பட்டாலும், பெற்ற பிள்ளைகளை கானகத்தில் விட்டாலும், ராமனைப் போல் கணவன் வேண்டுமென்றோம்… தான் ராமனென நிரூபிக்க அரும்பாடு பட்டார்கள்…

இடஒதுக்கீடை எதிர்த்து கோர்ட்டுக்கு போன பார்ப்பனர்கள் ஆ.ராசா சவாலை ஏற்று வழக்குப்போட அஞ்சுவது ஏன்?

ஆ.ராசா இல்லாத ஒன்றை சொல்கிறார் என்றால் அவரை நீதிமன்றத்துக்கு இழுத்து அம்பலப்படுத்த பாஜகவினர் பயப்படுவது ஏன்? https://youtu.be/1dtHcCRBxT8

1 2 3 336