Browsing: முகப்பு

சிந்தனைக் களம் – 8 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

என் முகமும் நானும் இன்று 3.30 ற்கு town இல் எனது nail Appointmentஐ மகள் book பண்ணி இருந்தார். மகள் வீட்டில் பேத்தியுடன் விளையாடி மதிய உணவு உண்டு relaxed ஆக இருந்து வெளிக்கிட 3.10ஆகிவிட்டது. சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற அவசர எண்ணத்தால் carஐ park பண்ணிவிட்டு 3.20 ற்கு வேகமாக நடந்தேன். அப்போது இந்திய அல்லது கறுப்பு இன இளைஞன் (இந்த நாட்களில் யாரைப்பார்த்தாலும் ஒரே மாதிரியாக தெரிகிறார்கள்) என்னை நோக்கி…

வாழ்வியல் சிந்தனைகள் – 27 – ராதா மனோகர்

Image Trap ! இமேஜ் பற்றிய பயம் ஒரு பொறி ! இந்த பயம் இருந்தால் No Creativity? பிறர் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் பலவேளைகளிலும் எமக்கு ஒரு சிறையாகி விடுகிறது, எம்மை பற்றி நாமே கருதிக்கொள்ளும் தோற்றங்களும் பலவேளைகளில் எம்மை நகரவிடாமல் செய்து விடுகிறது. பிறரின் அபிப்பிராயங்கள் எமது தீர்மானங்களின் மீது பாதிப்பை உண்டு பண்ணுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. அதன் காரணமாகவே பல சமயங்களில் நாம் நாமாக இல்லாமல் இருக்கிறோம்.…

விந்தன் சிறுகதைகள் – 9

தங்க வளையல் சிறுவனாயிருந்தபோதே நான் சிங்கப்பூருக்குப் போய் விட்டேன். காரணம் தாய் தந்தையற்ற அனாதையாயிருந்ததுதான். என்றைக்காவது ஒரு நாள் போயே போய் விடப் போகும் இந்த உயிரின்மீது எனக்கிருந்த ஆசையால்தான் யுத்தத்திற்குப் பயந்து திரும்பவேண்டி வந்தது. சென்னைத் துறைமுகத்தை வந்தடைந்தபோது எனக்கு எங்கு செல்வதென்றே புரியவில்லை. நகரை நான்கைந்து முறை வலம் வந்து பார்த்தேன்; வழி ஒன்றும் தோன்ற வில்லை. இரவு எட்டு மணி இருக்கும். மழை ‘சோ’ என்று பெய்து கொண்டிருந்தது. அப்பொழுது தான் எனக்குப்…

வாழ்வின் வண்ணங்கள் – 9 – கை.அறிவழகன்

சைக்கிள் முதன்முதலாக ஒரு புத்தம்புதிய சைக்கிளை பள்ளிக்கு ஓட்டிச் செல்வது என்பது வாழ்வின் மகத்தான அனுபவமாக இருந்தது, பளபளக்கும் சிவப்பு நிறத்தில் அந்த சைக்கிளை வீட்டு வேப்பமரத்தின் முன்பாக, அப்பா நிறுத்திய போது உண்டான உணர்வுகளை இப்போதும் என்னால் நினைத்துப் பார்க்க முடியும். கொண்டாட்டமும், பெருமிதமுமாய் தவித்தபடி நான் அங்குமிங்குமாய் ஒரு பூனைக்குட்டியைப் போல அலைந்து கொண்டிருந்தேன், அப்பா, சைக்கிளை நான் ஓட்டிச் செல்வதற்கான பாதுகாப்பு விதிகளை நீண்ட நேரமாக அன்றைய இரவில் பிரசங்கம் செய்துவிட்டுப் படுக்கப்போனார்.…

ஹிந்துமதம் பெண்களைப் போற்றுகிறது… நம்புங்கள்! – Dhinakaran ChelliahR

இந்தப் பதிவிற்கும் திரு.ஆ.ராசா மற்றும், திருமா அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பழைய நூல்களில் உள்ளவை இப்போது தேவையா என்கிறவர்கள் இப்பதிவை தவறாமல் வாசிக்கவும். சமத்துவம் விரும்புகிறவர்களும், மனிதநேயம் விரும்புகிறவர்களும், மதம் தாண்டி சிந்திக்கிறவர்களும் கண்டிப்பாக வாசிக்கவும். அனைத்தையும் சாதீ ரீதியாக பார்த்தே பழக்கப்பட்டுப் போன சமூகத்தில் வன்கொடுமை மட்டும் பெண்ணுக்கானது என தனித்து எப்படிப் பார்க்க இயலும்? இதுவரை பட்டியலினப் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகளை எதிர்த்து, பட்டியலினத்தவர் அல்லாத எத்தனை பேர்…

இலங்கை இந்தியா ஒப்பந்த வரலாறு – 11 – அமரர்.அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

சகோதர போராளிகள் படுகொலை.. கலைஞர் உட்பட நாம் நம்பிக்கை இழந்தோம்… அமரர். திரு.அ.அமிர்தலிங்கம் : இந்த திட்டத்தை டெல்லி சென்று நேரில் கையளித்ததோடு பல மணித்தியாலங்கள் வெளிநாட்டு அமைச்சரின் செயலாளரோடும் ஏனைய அதிகாரிகளோடும் உரையாற்றினோம். எமது முயற்சி விரும்பிய பயனைக் கொடுத்தது. இந்திய அரசின் போக்கில மீன்டும் எமக்குச் சார்பான மாற்றம் தோன்றியது. “இலங்கை அரசின் திட்டத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி விரிவான ஆக்கப்பூர்வமான மாற்று திட்டத்தைக் கொடுத்திருக்கின்றது’ – என்று பத்திரிகைகளுக்குக் கூறிய திரு ராஜீவ்…

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 12 – ராதா மனோகர்

12. தன் கை கொண்டே தன் கண்ணை மூடிய அரசர்கள்! புத்தூர் நம்பியின் முகாமில் ஏராளமான பணியாளர்கள் போர்கருவிகள்  தயாரிப்பில் முழுவீச்சுடன் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போர் கருவிகளின் அவசிய தேவை தற்போது இருப்பதாக நம்பியோ, பாக்கியத்தம்மாளோ  கருதவில்லை. ஆனால், எதிர்கால அரசியல் சூழ்நிலைகள் எந்த திசையில் செல்லும் என்பதை எவராலும் எதிர்கூற முடியவில்லை. தற்போது பார்ப்பன சமய மேலாதிக்கம் அயலில் உள்ள பல தேசங்களிலும் பரவி வருகிறதே? எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.…

சிந்தனைக் களம் – 7 – பாமினி ராஜஸ்வரமுதலியார்

தனது சரி பிழைகளை உணராதவர்கள் தன்நிலை அறிவதில்லை. மற்றவர்கள் மேல் குற்றம் சாட்ட முன்பு தன்னைத்தான் திரும்பிப் பார்ப்பது அவசியம். தன் பிழைகளை மறைக்க அடுத்தவரை அவமானப்படுத்தி, மற்றவர் கவனத்தை திசை திருப்புவதால் செய்த தவறு இல்லாமல் போய்விடுமா? எனது பதிவுகள் மனச்சாட்சியை தட்டி எழுப்பவும், சிந்திக்க வைக்கவும் எழுதுகிறேனே அன்றி குறை குற்றம் கூற அல்ல. திருந்துவதற்கு முதலாவது படி உணர்தலாகும். தவறுகளை செய்யாத மனிதர்கள் இப்பூமியில் இல்லை. அதுவே மனிதர்களை பதப்படுத்தி பண்படுத்துகிறது. அதனால்…

ஈரான் இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் திருப்புமுனை – பள்ளி மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர் – Rishvin Ismath

ஈரானிய இஸ்லாமிய அரசுக்கு எதிராக சாதாரண மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கடந்த வாரம் பல்கலைக் கழக மாணவர்கள் இணைந்து கொண்டதைத் தொடர்ந்து நேற்றைய தினம் பாடசாலை மாணவ, மாணவிகளும் இணைந்து கொண்டார்கள். ஈரானின் பல பகுதிகளிலும் இடம் பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பாடசாலை மாணவிகள் பங்கெடுத்துள்ளனர், அவற்றில் சில ஆர்ப்பாட்டங்களின் காணொளிகளின் தொகுப்பு இங்கே இணைக்கப் பட்டுள்ளது. ஈரானின் கரஜ் நகரில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் மாணவிகள் தமது ஹிஜாபை கழட்டியதுடன் அங்கே வருகை தந்திருந்த ஈரான் இஸ்லாமிய…

பொன்னியின் செல்வன் சினிமாவும் பாண்டிய நாட்டு பாமரனும் – நந்தன் ஸ்ரீதரன்

எனக்கும், அரிக்கும் இடையில் நடந்த பல்வேறு உரையாடல்கள் மிக சுவாரசியமாக இருக்கும்.. அப்படியாக ஒரு முறை இந்த அரண்மனைகள் பற்றிய பேச்சு வந்தது.. எங்க ஏரியாவில் நிறைய ஜமீன் அரண்மனைகளைப் பார்த்திருக்கிறோம்.. அவை கம்பேரிட்டிவ்வாகப் பார்த்தால் தற்போதைய பெரிய வீடுகளை விட வசதியில் குறைந்தவை.. கல்லும் காரையும் வைத்து கட்டப் பட்டிருக்கும்.. அதிக பட்சம் பத்து அறைகள் இருக்கலாம்.. ஆனாலும் அந்த அறைகள் எல்லாம் எளிமையான சின்ன சின்ன அறைகளாகத்தான் இருக்கும்.. தவசங்கள் எனப்படும் தானியங்கள் போட்டு…

எம்.ஆர்.ராதாவின் சிறை அனுபவங்கள் – 6 – விந்தன்

6. கோவிந்தா, கோவிந்தா! “ஒரு தீபாவளிக்கு நானே வெடி தயார் சேஞ்சேன்…” “என்ன வெடி, யானை வெடியா?” “இல்லை, அதுக்கும் அப்பன் வெடி!” “நரகாசுரன் ‘நம்ம ஆசாமி’ என்று சொல்வார பெரியார், நீங்கள் தீபாவளி கொண்டாடுவீர்களா, என்ன?” “வெடி நரகாசுரனுக்காக இல்லே, திருப்பதி கோவிந்தராஜனுக்காக!” “அட பாவமே!…அவன் என்ன செய்தான் உங்களை?” “அவன் ஒண்ணும் செய்யலே, அவனுடைய தேவஸ்தான நிர்வாகிங்க நாள் என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டாங்க!” “காரணம்?” “அது எனக்குத் தெரியாது. அன்னிக்கு என் கையிலே ஒரு…

சோத்துக்கு என்னடா பண்றீங்க? – தோழர் பாவெல் சக்தி

படம் பாக்குறதும், அதப்பத்தி சிலாகிச்சு பேசுறதும் மட்டுமே மிகப்பெரிய இன்டலக்சுவல் நடவடிக்கையா மாறிப்போன இந்த சமயத்துல சில விஷயங்களைப் பத்தி பேசுறதே பொருத்தமில்லாத ஒண்ணாதான் இருக்கும். ஆனா வேற வழி இல்ல. சோழ மன்னர்கள் ஏதோ அறத்திற்கும், நேர்மைக்கும் கட்டுப்பட்டவர்கள் போலவும், அவுங்க ஆட்சில பாலும் தேனும் பாய்ஞ்சு ஓடி, எல்லோரும் சரிசமமா சாதி பேதம் இல்லாம வாழ்ந்த மாதிரியும் யாரோ ஒருத்தர் கற்பனையா எழுதி வச்சிருக்கதும், அதை யாரோ நாலு பேரு படமா எடுத்து வச்சுருக்கதும்…

1 2 3 104