விஜய் பிறந்தநாளில் வெளியாகும் ‘தளபதி 65’ பர்ஸ்ட் லுக்!?

Share

விஜய்யின் பிறந்தநாளில் ‘தளபதி 65’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரியும். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அதையடுத்து மீண்டும் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. 

இந்நிலையில், வரும் ஜூன் 22-ம் தேதி விஜயின் பிறந்ததினம் என்பதால் அன்று தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நடிகர்களின் பிறந்தநாளில் அவர்கள் நடித்துவரும் படங்களின் அப்டேட் வெளியிட வேண்டும் என்பது கட்டாயமாகி வருகிறது.

தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளில் வெளியாக வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே விஜய் பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது.

தளபதி 65 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். யோகிபாபு, பூவையார் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

ஜூன் 22 அன்று விஜய் ரசிகர்களுக்கு தளபதி தரிசனம் கிடைக்குமா? என்று பார்ப்போம்!

Leave A Reply