ரஜினி-கமல்-விஜய்-அஜீத் ஏரியா!

Share

கோலிவுட் ஏரியாவில் கொரோனா பயம் விலகி, கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக சினிமா ஷூட்டிங்குகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் டைரக்ஷனில் விஜய்—பூஜா ஹெக்டே நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்து வருகின்றன. போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் டைரக்ஷனில் அஜீத் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்துவிட்டது. ஒரே ஒரு ஃபைட் சீன் மட்டும் தான் ஷூட் செய்யப்பட வேண்டும்.

அதே போல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா டைரக்ஷனில் ரஜினி—நயன் தாரா—மீனா—குஷ்பு—கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு என மெகா நட்சத்திரப் பட்டாளங்களுடன் நடந்து வந்த ‘அண்ணாத்த’ ஷூட்டிங், கடந்த 2020 மார்ச். கொரோனா லாக்டவுனின் போது நிறுத்தப்பட்டது. 2020 தீபாவளிக்கு ‘அண்ணாத்த’வை ரிலீஸ் பண்ணிவிட வேண்டும் என்ற ப்ளானில் தான் இருந்தார் சன் பிக்சர்ஸ் அதிபர் கலாநிதி மாறன். ஆனால் கொரோனாவால் எல்லாமே மாறிவிட்டது.

இதற்கிடையே ரஜினியின் அரசியல் அறிவிப்பு—பரபரப்பு—படபடப்பு என ஒரு சில மாதங்கள் ஓடியதால் பொறுமை காத்தார் கலாநிதி. 2021 ஜனவரியில கட்சி ஆரம்பிக்கப் போறேன். எத்தனாந்தேதிங்கிறத டிச.29 ( 2020)—ஆம் தேதி சொல்றேன். அதுக்குள்ள 40% மிச்சமிருக்கிற ‘அண்ணாத்தே’ ஷூட்டிங்க முடிச்சுட்டு வந்துர்றேன்னு சொல்லிட்டு டிச.10—ஆம் தேதி ஹைதரபாத் கிளம்பிப் போனார் ரஜினி.

ஷூட்டிங் ஆரம்பிச்ச இரண்டே நாட்களில் ‘அண்ணாத்த’ படக்குழுவில் ஏழெட்டுப் பேருக்கு கொரோனா அட்டாக் பண்ண, ரஜினிக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஹைதரபாத் அப்பல்லோவில் அட்மிட்டாகி, குணமாகி சென்னை திரும்பினார். இரண்டு மாதங்களுக்கு மேலாக ஓய்வெடுத்த ரஜினி, தேர்தலில் ஓட்டுப் போட்டுவிட்டு சில நாட்கள் கழித்து மீண்டும் ‘அண்ணாத்த’ ஷூட்டிங்கிற்காக ஹைதரபாத் கிளம்பினார்.

மீண்டும் கொரோனா பீதி ரொம்பவே பயமுறுத்த, கதிகலங்கிப் போயுள்ளனர் ரஜினியின் குடும்பத்தார். 2021 தீபாவளிக்காவது ‘அண்ணாத்த’வை ரிலீஸ் பண்ணிவிடலாம் என்ற ஐடியாவில் இருந்த கலாநிதி மாறனோ, ஷூட்டிங்கை நிறுத்திவிடலமா என யோசிக்கத் தொடங்கிவிட்டாராம். இதே நிலை தான் ஜார்ஜியாவில் நடக்கும் விஜய் பட ஷூட்டிங்கிற்கும்.

இப்ப கமல் பட சங்கதி தான் செம ட்விஸ்ட். கமல்– லைக்கா சுபாஷ்கரண் –டைரக்டர் ஷங்கர் கூட்டணியில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது ‘இந்தியன் –2’. 30% ஷூட்டிங் முடிந்திருந்த நிலையில் கொரோனா வந்தது. லாக்டவுன் ரிலாக்ஸ் ஆன நிலையில் அரசியல் களத்திற்குப் போய்விட்டார் கமல். இந்த கேப்பில் மற்ற ஆர்ட்டிஸ்டுகளை வைத்து 60% ஷூட்டிங்க்கை முடித்தார் ஷங்கர். இனிமேல் கமல் இல்லாமல் ஷூட்டிங்கை நடத்த முடியாது என்பதால் அத்துடன் ஸ்டாப் பண்ணினார் ஷங்கர்.

தேர்தல் முடிந்த கையோடு, தனது சொந்த பேனரில் லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் ‘விக்ரம்’ படத்தை கண்டினியூ பண்ணுவதில் ஆர்வம் காட்டினார் கமல். ஷங்கரோ மகேஷ் பாவுவை வைத்து தெலுங்குப் படம் ரன்வீர்சிங்கை வைத்து இந்திப் படம் என 50 கோடிக்கு மேல் அட்வான்ஸ் வாங்கிவிட்டார். இதனால் ரொம்பவே கடுப்பான சுபாஷ் கரண், கமல் அரசியல்வாதியாகிவிட்டதால் ஷங்கரை கோர்ட்டுக்கு இழுத்தார். ‘இந்தியன் –2’ முடிச்சுக் கொடுக்காம ஷங்கர் வேற எந்தப் படத்தையும் எடுக்கக்கூடாதுன்னு உத்தரவு போடுங்க யுவர் ஹானர் என கண்ணீர் விட்டார்.

ஏங்க இதெல்லாம் எங்களுக்கு ஒரு வேலையாங்க. நீங்களே உங்களுக்குள்ளேயே பேசி முடிச்சு ஒரு வழிக்கு வாங்க” எனக் கூறிவிட்டனர் நீதிபதிகள்.

அப்பாடா…..தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்கள் நாலு பேரைப் பத்தியும் ஒரே மேட்டர்ல சொல்லிட்டம்ல.

–சீமராஜா

Leave A Reply