வெற்றிமாறன் இயக்கத்தில் முதல்முறையாக சூர்யா நடிக்கும் வாடிவாசல்

Share

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைபெற்றுள்ளது.

‘காப்பான்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ‘அருவா’, ‘வாடிவாசல்’ திரைப்படங்களில் அவர் நடிக்கவுள்ளார்

இதில் ‘வாடிவாசல்’ திரைப்படம் சூர்யா நாயகனாக நடிக்கும் 40வது படம்வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும். இப்படத்தைத் விகிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகவிருக்கும் இப்படத்திற்கு நாவலின் அதே பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழரின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு குறித்த கதை என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று (ஜூலை 23) சூர்யாவின் 45 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் முதல் பார்வைபோஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.அந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ள சூர்யாவின் வீரம் மிளிரும் கிராமத்து இளைஞனின் தோற்றம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. அசுரன்’ திரைப்பட வெற்றிக்கு பிறகுவெற்றிமாறன் -சூர்யா இணையும் முதல் படம் ‘வாடிவாசல்’ ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 75ஆவது திரைப்படமாகவும் இருப்பதால் திரைப்பட துறையினரின் கவனத்திற்குரிய படமாக மாறியுள்ளது

படத்தின் அறிவிப்பு வெளியான நேரத்தில் இதனைக் குறிப்பிட்டு தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்ட ஜி.வி.பிரகாஷ், “என்னுடைய 75ஆவது திரைப்படம் மிகவும் ஸ்பெஷலானது. வெற்றிமாறன், சூர்யா, தாணு என வலிமையான கூட்டணியில் அதன் சத்தமும் தனித்துவமானதாக இருக்கும்” என்று கூறியிருந்தார்.

Leave A Reply