கவிஞர் வைரமுத்துவுக்கு ONV இலக்கிய விருது

Share

சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை வைரமுத்து 7 முறையும், இலக்கியப் படைப்புக்கான சாகித்ய அகாடமி விருதையும், இந்திய ஒன்றிய அரசின் பத்மபூஷண் விருது பெற்றவர்.

இந்நிலையில் கவிப்பேரரசு’ வைரமுத்துவுக்கு கேரளாவின் மிகப் புகழ்பெற்ற விருதான ஓ.என்.வி. விருது அறிவிக்கப்பட்ருள்ளது. மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி.குறுப்பு அவர்களின் பெயரால் கேரளப் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் குழு விருதாளரைத் தேர்வு செய்து இந்த விருதினை வழங்கி வருகிறது.

ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய அளவிலான இந்த உயரிய விருதைப் பெறும் மலையாள மொழியல்லாத முதல் கவிஞர் என்ற பெருமைக்கு வைரமுத்து சொந்தக்காரராகியுள்லார்.

தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசின் இலக்கியப் பயணம் சிறந்திட வாழ்த்துகள் என முதலைமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

Leave A Reply