Home > சினிமா > மணிரத்னம் லஷணம் – கோவி.லெனின் பார்வையில்!

மணிரத்னம் லஷணம் – கோவி.லெனின் பார்வையில்!

நான் மணிஷாருக்கோ புளிச்சமாவுக்கோ ரசிகன் இல்லை

-என்பவர்கள் மட்டுமே இதனைப் படிக்கவும்

FDFS டிக்கெட் எடுத்து படம் பார்த்துட்டு ஆபீசுக்கு வந்தவர் ஒரே அழுவாச்சு. கோட்டைச்சாமி.. என்னய்யா ஆச்சுங்கிற ரேஞ்சுல அவரை உலுக்கினோம். PS-2 படம் அவரை அந்தளவுக்கு கலங்கடிச்சிருக்கு. ஆதித்த கரிகாலன் இப்படி சாவான்னு எதிர்பார்க்கலை என்றபடி கண்களைத் துடைத்தார். அப்படியும் கண்ணீர் நிற்கவில்லை.

பொன்னியின் செல்வன் எனும் கற்பனை மிகுந்த வரலாற்றுப் புதினத்தில், ஆதித்தன் கொலையில் தன் இனத்தாரைக் காப்பாற்றுவதற்காக கல்கியே பல இடங்களில், டல் லைட்டில் எடுக்கப்பட்ட சீன் போல கதையை லேசா நகர்த்தி உட்டுருப்பாரு. மொத்த படத்தையுமே அரையிருட்டில் எடுத்து அசத்துபவரான மணி ஷார் என்ன செய்வாரு? பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆயிட்டாரு.

மணிஷார் பம்பாய் படம் எடுத்த நேரத்துல பால்தாக்கரே உயிரோடுதான் இருந்தாரு. படம் பற்றிக் கேள்விப்பட்டு அவர் உறுமுறாருன்னு தெரிஞ்சதும் படப்பெட்டியைத் தூக்கிட்டுப் போய், அவர் முன்னாடி ரீல் ஓட்டிக்காட்டி, “உங்களை இதில் எதுவும் தப்பா காட்டலை” என்று சாவர்க்கர்த்தனம் செய்து படத்தை ரிலீஸ் பண்ணுனாரு.

இருவர் படம் வந்தப்ப இங்கே கலைஞர் முதலமைச்சரா இருந்தாரு. தம்பதி சமேதராய் மணி ஷார்  போய் கலைஞரைப் பார்த்து ரீல் ஓட்டிக் காட்டுனாரு. ‘உம்மவாளுக்கே இதுதானே வேலை’ன்னு கலைஞரோட மைன்ட் வாய்ஸ் சொன்னாலும், ஒரு படத்தை ரீ-சென்சாருக்கு அனுப்பி வச்சா, படம் எடுத்தவங்க என்ன பாடுபட வேண்டியிருக்கும்னு பராசக்தி படத்தின் சென்சாருக்காக ஒவ்வொரு நாளும் பல மாடிப்படிகள் ஏறி இறங்கிய உண்மையான கலைஞரான அவருக்குத் தெரியும். அது மட்டுமா தெரியும்? ஒரு  படம், பார்க்குற லட்சணத்துல இருக்கா இல்லையாங்கிறதும் அவருக்குத் தெரியும். அதனால படத்தை ரிலீஸ் பண்ணிக்கன்னு சொல்லிட்டாரு. பல ஊர்களில் இரண்டு வாரம் கூட இருவர் படம் ஓடலை. இந்த டி.வி. சேனல்காரனுங்கதான் திரும்பத் திரும்ப போட, வேலைவெட்டி இல்லாம வீட்டில் இருந்த 90 கிட்ஸ் அதைப் பார்த்து, மணி ஷாரை தமிழ்நாட்டு அரசியல் ‘ஆய்’வாளரா நினைச்சிக்கிட்டு திரிஞ்சிது.

அப்புறம் மணி ஷார், குருன்னு ஒரு படம் எடுத்துட்டு, அம்பானிக்கிட்ட படப்பெட்டியைத் தூக்கிட்டுப்போய், உங்களை இதில் தப்பா சொல்லலைன்னு அதே சாவர்க்கர்தனத்தில் சமாளிச்சு ரிலீஸ் செஞ்சாரு. தனக்கேயுரிய அந்த பழைய பாணியில் ஆதித்த கரிகாலனுக்கே ஸ்பெஷல் ஷோ போட்டுக் காட்ட மணிஷார் நினைச்சிருக்கலாம். But அவர் bad luck. ஆதித்த கரிகாலன் ஆயிரம் வருசத்துக்கு முன்னாடியே no more.

மணிஷாரோட முதல் தமிழ்ப் படம் பகல் நிலவு. அதில் வில்லன் கேரக்டருக்கு பெருந்தலைவர் காமராஜர் சாயலில் உயரம், உடை, தோற்றம்னு இருக்கும். நாயகன் படத்தில் கமல் பெரும் கடத்தல்புள்ளியா மாறி வரும் காட்சிகளில் பேராசிரியர் அன்பழகன் போன்ற சாயல் தெரியும்படி கவனமாக செதுக்கியிருப்பார் மணி ஷார். ஆய்த எழுத்து படத்துல வில்லன் தோற்றம் எப்படி? கருப்புசட்டை போட்ட அரசியல்வாதி. இதையெல்லாம் கேட்டால், “அவர் இஷ்டத்துக்கு அவர் படம் எடுக்குறாரு, படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடலாமா”ன்னு மணிஷார் ரசிகக் குஞ்சுகள் கிளம்பி வரும்.

கல்கி எழுதுன கற்பனைக் கதையை எப்படி வேணும்னாலும் மணிஷார் எடுத்துட்டுப் போகட்டும். அடுத்ததா, காந்தி படத்தை புளிச்சமாவு வசனத்துல எடுக்குற ஐடியா எதுவும் வேண்டாம். ஆதித்தகரிகாலன் நந்தினி கையிலே இருந்த கத்தியிலே போய் சொருகிகிட்டு சூசைட் பண்ணிக்கிட்ட மாதிரி,  காந்தியும் கோட்சேவோட துப்பாக்கியை வலுக்கட்டாயமா வாங்கி சுட்டு தற்கொலை பண்ணிக்கிட்டதா மணிஷார் சீன் வச்சிடப் போறாரு. அந்த சீனுக்கு புளிச்சமாவு. ‘ஹே ராம்‘னே உணர்ச்சி பொங்க டயலாக் எழுதுனாலும், அந்த கேரக்டரா நடிக்கிறவர் வாயிலிருந்து வரப்போறதென்னவோ,    போடா..ங்

You may also like
திராவிடத்தால் வாழ்கிறோம் 21 – கோவி.லெனின் – சொக்கலிங்கம்
திராவிடத்தால் வாழ்கிறோம் 20 – கோவி.லெனின் – சொக்கலிங்கம்
திராவிடத்தால் வாழ்கிறோம் 19 – கோவி.லெனின் – சொக்கலிங்கம்
திராவிடத்தால் வாழ்கிறோம் 18 – கோவி.லெனின் – சொக்கலிங்கம்

Leave a Reply