பிறந்தநாளுக்கு ரசிகர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டாம் – ரஜினி அறிவிப்பு

Share

அரசியல் கட்சி தொடங்க உள்ள ரஜினி அதற்கு முன்பாக அண்ணாத்த படப்பணிகளை முடிக்க ஹைதராபாத் செல்வதால் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினி வரும் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் அண்ணாத்த பட பணிகளை டிசம்பருக்குள் முடிக்க அறிவுறுத்தியுள்ள ரஜினி இன்று படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றுள்ளார்.

இந்நிலையில் வரும் டிசம்பர் 12 அன்று நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது.

வழக்கமாக ஆண்டுதோறும் ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று அவரது தொண்டர்கள், ரசிகர்கள் அவரது போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரள்வது வழக்கம்.

இந்நிலையில் தற்போது ரஜினி படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றுள்ளது, அரசியல் பணி ஆகியவற்றில் பிஸியாக இருப்பதால் தொண்டர்கள் யாரும் போயஸ் கார்டன் இல்லத்திற்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave A Reply