சிம்பு படம் மீண்டும் தொடக்கம்

Share

சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பை முடித்த சிம்பு, உடனடியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படப்பிடிப்பில் கலந்துகொண்டார். படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.

முன்புபோல் இல்லாமல், நேரத்திற்கு படப்பிடிப்புக்கு தவறாமல் வந்துவிடுகிறார். இப்போ, சிம்பு  பிஸி நடிகர். கடந்த வருட ஜூன் மாதம் சிம்பு நடிப்பில் ஒரு படம் தயாராகி வந்தது.

கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் தான் அது. அப்படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துவந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 15, 2019ல் துவங்கியது.

கன்னடத்தில் இயக்கிய நார்தன் தமிழிலும் படத்தை இயக்கிவந்தார். படத்தில் சிம்பு டான் கேரக்டரிலும், கெளதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வந்தது.

சிம்பு இப்போது தொடர்ச்சியாகப் படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். அதனால், முஃப்தி ரீமேக் குறித்தும் பேசியிருக்கிறார்கள். சிம்பு சம்மதத்துடன் மீண்டும் இந்தப் படத்துக்கான பணிகளை துவங்கியிருக்கிறது படக்குழு.

அதோடு, படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் துவங்கும் என்று சொல்லப்படுகிறது. சிம்பு அப்படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.

இப்போது ட்விஸ்ட் என்ன வென்றால், படத்தின் இயக்குநரை மாற்றிவிட்டார்களாம்.

ஒரிஜினல் முஃப்தி பட இயக்குநர் நார்தனுக்கு பதில், ஜில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணாவை இயக்குநராக நியமித்திருப்பதாக ஒரு தகவல்.

ஏன் சிம்பு முஃப்தி படப்பிடிப்பில் இருந்து சொல்லாமல் கிளம்பினார், இயக்குநர் ஏதும் காரணமா? இயக்குநரை ஏன் மாற்றினார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. நமக்கென்ன, வேலை முடிந்தால் போதும் என்ற முடிவில் இருக்கிறார்கள் தயாரிப்பு தரப்பினர்.

Leave A Reply