மீண்டும் சூர்யாவை இயக்க தயாராகும் சிறுத்தை சிவா

Share

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அந்த நேரத்தில் நடிகர் சூர்யா, சூரரைப்போற்று படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் சூர்யாவுடன் இணையாமல் ரஜினியை ‘அண்ணாத்த’ வைத்து படத்தை இயக்க ஆரம்பித்தார். 

அதேநேரம் நடிகர் சூர்யா, பாண்டியராஜ் இயக்கத்தில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யா பிறந்தநாளையொட்டி வெளியாக உள்ளது. இந்த படத்தையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா இணையவுள்ளார். 

இந்நிலையில் இந்த இரு படங்களை முடித்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்‌ வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா ‘அண்ணாத்த’ படத்தை விரைவில் முடிக்கவுள்ளார். இதையடுத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சூர்யாவின் படத்தை இயக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்து மீண்டும் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Leave A Reply