பெண்கள் சர்வதேச பட விழாவுக்கு தேர்வான ஒரே இந்தியப் படம்

Share

மலையாளத்தில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் அமர் ராமச்சந்திரன் தமிழில் நடித்த தாய்நிலம் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசிற்கு தயாராக உள்ளது. இந் நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் ’பக்ஷிகளுக்கு பறயான் உளது’ (பறவைகள் சொல்ல நினைப்பது ) படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

பஹாமாஸ் நாட்டில் நடைபெற உள்ள உலக பெண்கள் திரைப்பட விழாவில் திரையிட இப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே ஒரு திரைப்படமும் இதுவே…

சுதா ராதிகா என்ற பெண் இயக்குனரால் இயக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் சந்தர்ப்ப சூழலால் சில தவறுகளை மனதிற்குள் புதைந்து வைத்திருக்கும் மனநிலை கொண்ட பறவைகள் ஆராய்ச்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் டாக்டர் அமர் இராமச்சந்திரன் என்கிறார் படத்தின் இயக்குனர்

அநேக திரைப்பட விழாக்களில் இதுவரை திரையிடப்பட்ட இப்படம் பஹாமாஸில் பெண்கள் திரைப்பட விழாவில் பங்கேற்பதால் ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் மிகப் பெருமையாக உள்ளது என்கிறார் டாக்டர் அமர் ராமச்சந்திரன்.

இந்த திரைப்படத்தில் அமர் ராமச்சந்திரன், மீனாக்ஷி, நீலாஞ்சனா, லைலா, நமிதா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

Leave A Reply