பூஜா ஹெக்டேவை விஜய் ஏன் ஓ.கே. செய்தார்?

Share

2012ல் முகமூடி என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார். அதுவும் விஜய் ஜோடியாக.

தெலுங்கிலும் இந்தியிலும் பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து இரண்டு மொழி ரசிகர்களிடமும் பாப்புலராக இருக்கிறார்.

அதுவும், நாக சைதன்யா, ஜூனியர் என்டிஆர், சிரஞ்சீவி, மகேஷ்பாபு, பிரபாஸ், ராம்சரன், அல்லு அர்ஜுன், அக்ஷய் குமார் என்று பாப்புலர் ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். சில நடிகர்ளுடன் அடுத்தடுத்து இரண்டு படங்கள் நடித்திருக்கிறார்.

இதுதான் விஜய்க்கு ஜோடியாக இவரை பிடிக்க காரணம் என்று கூறுகிறார்கள். ஆம். இப்போதெல்லாம் தமிழில் படம் எடுத்தால் தமிழை மட்டும் நம்பி எடுப்பதில்லை. தெலுங்கு, இந்தியிலும் டப் செய்கிறார்கள்.

அதனால்தான், அந்த மொழிகளிலும் பாப்புலர் ஆன, ரசிகர்களுக்கு அறிமுகமான கதாநாயகிகளை பிடிக்கிறார்கள்.

எம்ஜியார் காலத்திலெல்லாம் அவர் தனது வயதை குறைத்துக்காட்ட சின்ன பெண்களை காண்ட்ராக்ட்டில் பிடித்துப் போட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு தனது படித்தை தவிர வேறு படங்களில் நடிக்க விடமாட்டார்.

இப்போவெல்லாம் நடிகர்கள் தங்கள் வயதுக்கேற்ற மெச்சூரிட்டியை நடிகைகளிடம் எதிர்பார்க்கிறார்கள். நல்ல விஷயம்தான்.

Leave A Reply