தி கிரேட் இந்தியன் கிச்சனில் ஐஸ்வர்யா ராஜேஷ்

Share

மலையாள மொழியில் வெளியாகி இந்தியாவெங்கும் அதிர்வலைகளை கிளப்பிய, “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படம், இயக்குநர்  R.கண்ணன் இயக்கத்தில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவிச்சந்திரன் நடிக்க தமிழில் உருவாகிறது. இயக்குநர்  R.கண்ணன் அவர்களே தனது மசாலா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. படத்தினை  ஒரே கட்டமாக படமாக்ககியுள்ளார்கள்.

படம் குறித்து நாயகி ஐஷ்வர்யா ராஜேஷ் கூறியதாவது…

பொதுவாக ஒரு படத்தை ரீமேக் செய்வது என்பது மிகக்கடினம். படத்தின் அடிப்படை ஆத்மாவை அப்படியே கொண்டு வருவது என்பது முடியாத காரியம் அதனால் நான் நிறைய ரீமேக் நடிக்க மறுத்திருக்கிறேன். ஆனால் இந்தப்படம் என்னை தேடி வந்த போது கண்டிப்பாக செய்ய வேண்டும் என நினைத்தேன். இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையான கருத்து இப்படத்தில் இருக்கிறது. நான் கா பெ ரண்சிங்கம் படத்தில் நடித்துகொண்டிருந்தபோது ஒரு சிறு பெண்ணை சந்தித்தேன் அவளக்கு எதுவும் சொல்லாமலேயே சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தது. இன்றும் பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பழக்கம் நம் சமூகத்தில் இல்லை. கிராமம் நகரம் என அனைத்து இடங்களிலும் கண்டிப்பாக இப்படம் பார்க்கப்பட வேண்டும். இயக்குநர் R.கண்ணன்  அவர்களுடன் எனக்கு முதல் படம் மிகச் சிறந்த இயக்குநர், அருமையான படக்குழு படப்பிடிப்பு அனுபவம் அற்புதமாக இருக்கிறது படமும் மிகச்சிறப்பாக வரும் என்றார்.

Leave A Reply