நாட்டு மாடு நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்!

Share

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் செருகளத்தூர் பகுதியில் நாட்டு மாடு நலச்சங்கம் மாவட்ட செயலாளர் SPA. பாபு பாண்டியன் மாவட்ட தலைவர் AM. அருள் ஆரோக்கியதாஸ் ஆகியோர் செருகளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களிடம் நாட்டு மாடுகளின் அவசியம் குறித்து துண்டு பிரசுரம் அளித்தனர். அதில் உள்ள வாசகங்கள் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது

ஓம் காளி ஜெய் காளி மைதா கோதுமை தின்னா மனுஷன் காலி.

ஓம் சக்தி பராசக்தி குக்கர் சோறு தின்னா உனக்கில்லை சக்தி.

சாமியே சரணம் ஐயப்பா பிராய்லர் கோழி கறி தின்னா நோய் அப்பா.

கோவிந்தா கோவிந்தா குளிர்பானம் குடித்த குடிமக்கள் கோவிந்தா.

ரசாயன உரம் மண்ணை மலடாக்கியது மரபணு மாற்றம் விதைகளை மலடாக்கியது மைதா கோதுமை உணவு மனிதர்களை மலடாக்குகிறது.

மாட்டுக்கு சினை ஊசி மனிதனுக்கும் சினை ஊசி மாட்டுக்கு சுகப்பிரவசம் மனிதனுக்கு அறுவை சிகிச்சை.

குடிக்க கூடியது கரும்புச்சாறும் இளநீரும் குடிக்கக்கூடாது மதுபானமும் குளிர்பானமும்.

இவ்வாறு அந்தப் பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply