பாகிஸ்தானில் இந்துக்கள் எண்ணிக்கை குறைவதாக அமித் ஷா பொய் சொல்கிறார் – புள்ளிவிவரங்களுடன் பதில்!

Share

பாகிஸ்தான் உருவானபோது 1947ல் 23 சதவீதம் இந்துக்கள் இருந்ததாகவும், இப்போது 3.7 சதவீதம் பேர் மட்டுமே இருப்பதாகவும் குடியுரிமைச் சட்டத்தை தாக்கல் செய்து பேசும்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டிருந்தார். இந்துக்கள் கொல்லப்பட்டிருக்கலாம், அல்லது இஸ்லாமியர்களாக மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

அவர் பேசியதை பாகிஸ்தான் அரசு புள்ளிவிவரங்களுடன் மறுத்துள்ளது. 1947ல் அப்போதைய மேற்கு பாகிஸ்தானாக இருந்த தற்போதைய பாகிஸ்தானில் 23 சதவீதம் இந்துக்கள் இருந்ததாக அமித் ஷா கூறுவது அப்பட்டமான பொய். 1961ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் முஸ்லிம் அல்லாதவர்கள் 2.83 சதவீதம் பேர் மட்டுமே இருந்தார்கள். இது 1972 கணக்கில் 3.25 சதவீதமாகவும், 1981ல் 3.30 சதவீதமாகவும், 1998ல் 3.70 சதவீதமாகவும் இருந்தது. 2017ல் எடுக்கப்பட்ட கணக்கு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் முஸ்லிம் அல்லாதவர்கள் 4 சதவீதமாக உயர்ந்திருக்கலாம் என்று இந்துக்கள் கவுன்சில் தலைவர் மங்லானி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் வசிக்கும் மொத்த இந்துக்களில் 80 சதவீதம் பேர் தெற்கு பகுதியான சிந்து மாகாணத்தில்தான் வசிப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் அமைந்துள்ள பாஜக தலைமையிலான அரசு சிறுபான்மை இஸ்லாமியரை பழிதீர்க்கும் வகையிலும் இந்துத்துவா மேலாதிக்கத்தை அமல்படுத்துவதாகவும் பாகிஸ்தான் அரசு கூறியிருக்கிறது.

மோடி தலைமையிலான அரசு, சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறித்து அவர்கள் நசுக்குகிறது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி தெரிவித்தார்.  காஷ்மீரை சட்டவிரோதமாக இணைத்தது, பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு நிலத்தை கொடுத்தது, இப்போது குடியுரிமை சட்டத்தை திருத்தியது என்று சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

Leave A Reply