மக்களை கைதட்ட, டார்ச் அடிக்க சொல்வதாலோ பிரச்சனை தீராது….ராகுல் காந்தி ட்விட்

Share

புதுடில்லி: கொரோனா வைரசை எதிர்க்க இந்தியா போதுமான அளவிற்கு சோதனையிடப் படவில்லை. மக்களை கைதட்ட சொல்வது மற்றும் வானத்தில் டார்ச் ஒளி எழுப்புவதால் பிரச்னையை தீர்க்க முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 601 நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கேரளா, மத்திய பிரதேசம், டெல்லியில், 58 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2902 ஆக உயர்ந்து உள்ளது. முன்னர் பிரதமர் மோடி கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்த வரும் ஏப்.,5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கை அணைத்து பால்கனியில் நின்றுக்கொண்டு தீபம், டார்ச் ஒளிர செய்யுங்கள் என நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது;  கொரோனா வைரசை எதிர்க்க இந்தியா போதுமான அளவிற்கு சோதனையிடப் படவில்லை. மக்களை கைதட்ட சொல்வது மற்றும் வானத்தில் டார்ச் ஒளி எழுப்புவதால் பிரச்னையை தீர்க்க முடியாது. இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார். மேலும், அந்த பதிவுடன் இந்தியாவில் ஒரு மில்லியன் மக்களில் எத்தனை பேருக்கு சோதனை செய்யப்பட்டது என்பதை விளக்கும் படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 29 பேரை சோதித்து வருவதாகவும், பாகிஸ்தானில் 67 பேரை சோதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தென்கொரியா ஒரு மில்லியனுக்கு 7,622 பேரை சோதனை செய்கிறது.

Leave A Reply