கே.பி.முனுசாமியை பேபி முனுசாமியாக்கிய செந்தில்பாலாஜி!

Share
தன்னை ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜாவாக காட்டிக்கொள்ள விழையும் கே.பி.முனுசாமி, இல்லை, பதவி சுகத்துக்காக OPS மற்றும் EPS தோள்களில் குழந்தை போல மாறி மாறி சவாரி செய்யும் பேபி முனுசாமி, செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
9 மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெறாத காரணத்தால் உண்டான விளைவுகள் என்ன என்பதை பலமுறை புள்ளி விவரங்களுடன் விளக்கிவிட்டேன். அப்போதெல்லாம் மூளையை முதுகு பக்கமும், முகத்தை மூடின கதவு பக்கமும் வைத்திருந்திருந்தீர்களோ?
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்திருந்தால், ஏன் 4.5 லட்சம் விவசாய இணைப்புகள் தரவில்லையென எடப்பாடியிடமும் P Thangamani யிடமும் காரணங்களை கேட்டு ஒரு 80 பக்க நோட்டில் குறித்துக்கொண்டு முனுசாமி மனப்பாடமாக சொல்ல வேண்டும்.
எடப்பாடியின் ஆட்சியில் மின் உற்பத்திக்காக துவங்கப்பட்ட திட்டங்கள் எவை? திட்டங்களின் மதிப்பீட்டு தொகை எவ்வளவு? அதற்காக செலவு செய்யப்பட தொகை என்ன? அந்த திட்டங்களால் எத்தனை மெ.வா மின்சாரம் தயாரிக்கப்பட்டது? அந்த திட்டங்களின் இன்றைய நிலை என்ன என்பதை முனுசாமி சொல்ல வேண்டும்.
எருதுக்கு பதிலாக ஏரோப்ளேனை கட்டி ஏர் ஓட்ட வேண்டுமென பேராசைக் கொண்ட முனுசாமி, சென்ற அதிமுக ஆட்சியில் எத்தனை லட்ச முறைகள் மின்வெட்டுகள் ஏற்பட்டதென எண்ண ஆரம்பித்தால், 3 வாரம் கழித்து தான் உணவு உண்ண முடியும்.
பதவி சுகத்துக்காக OPS மற்றும் EPS என அணி மாறி கழுத்தை அறுத்த முனுசாமி , விசுவாசம் பற்றி பேசுவது, நரி நியாயம் பேசுவது போல இருக்கிறது. ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு MLAவா மாற குட்டிக்கரணங்கள் அடித்த முனுசாமி நிர்வாக திறன் பற்றி பேசலாமா?
ஆளுமைமிக்க தலைவரிடம் நான் பணியாற்றுகிறேன், எந்த கேள்வியும் எதிர்கொள்ளும் நெஞ்சுரம் தலைவர் தந்தது. புள்ளி விவரத்துடன் என்னுடன் விவாதியுங்கள். இல்லையெனில், இப்படி எதுவுமே தெரியாமல் உளறாமல், உங்களில் யார் அடுத்த அடிமையென ஓரமாக விளையாடிக்கொண்டு இருங்கள்.

Leave A Reply