ரஸ்ய அதிபரைக் கண்டித்த பைடன்

Share

தற்போது நடைபெற்று வரும் ஐநா பொதுச்சபை அமர்வில் பல்வேறு நாட்டு தலைவர்களும் உரையாற்றி வருகின்றனர்.

நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார்.

உணவுப் பாதுகாப்பின்மை, மோதல்கள், இயற்கை பேரழிவுகள் உட்பட உலகம் முழுவதும் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு அதிபர் பைடன் உரையை தொடங்கினார்.

யுக்ரேன் போர்

யுக்ரேன் விவகாரம் குறித்துப் பேசும்போது, கடந்த ஆண்டு உலகம் மிகப்பெரும் எழுச்சியையும், ஒரு மனிதரால் தொடங்கப்பட்ட தேவையற்ற போரையும் சந்தித்தது என்றார் பைடன். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு
நாடான ரஷ்யா, அதன் அண்டை நாடு மீது படையெடுத்ததாகவும், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் முக்கிய கொள்கைகளை
தெளிவாக மீறியதாகவும் பைடன் குற்றம்சாட்டினார்.

ரஷ்யாவிற்கு அச்சுறுத்தல் இருந்ததால் தான் செயல்பட வேண்டியிருந்ததாக புதின் கூறுகிறார், ஆனால் யாரும் ரஷ்யாவை அச்சுறுத்தவில்லை, ரஷ்யாவைத் தவிர வேறு யாரும் மோதலை நாடவில்லை எனக் கூறிய பைடன்,
ஐரோப்பாவிற்கு எதிராக அணு ஆயுத அச்சுறுத்தல்களை புதின் விடுத்துள்ளதாக கூறினார்.

ரஷ்யாவின் படையெடுப்பு யுக்ரேன் நாட்டின் உரிமையை, மக்களின் உரிமைகளை நசுக்குவது தொடர்பானது என்று பைடன் கூறினார். போரை தொடங்குவதற்கு முன்பு, யுக்ரேன் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது, உண்மையான நாடான
இருந்ததில்லை என்று புதின் கூறியதை பைடன் நினைவூட்டினார்.

இப்போது பள்ளிகள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகளின் மீது தாக்குதல் நடத்தவதாக குற்றம்சாட்டிய பைடன், ரஷ்யாவின் போர்க்குற்றம் இழைத்து வருவதற்கு இதைவிட மோசமான வெகுஜன புதைக்குழி சான்றுகளையும் நாம் பார்த்துவருவதாகக் கூறினார்.

யுக்ரேனுக்கு தனிப்பட்ட முறையில் பெரிய அளவிலான பாதுகாப்பு உதவி மற்றும் நேரடி பொருளாதார ஆதரவை அமெரிக்கா வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“ஒரு நாட்டின் பிரதேசத்தை தங்கள் விருப்பப்படி யாரும் கைப்பற்றி விட முடியாது” என்று நாங்கள் அனைவரும் கையெழுத்திட்ட தீர்மானத்தின்படி, இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா விரும்புவதாக தெரிவித்த பைடன், அதற்கு குறுக்கே இருக்கும் ஒரே நாடு ரஷ்யா மட்டும்தான் என்றார்.

இந்தத் தீர்மானத்தில் ஐ.நா. உறுப்பினர்கள் உறுதியாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட பைடன், இறையாண்மையுள்ள நாடுகளுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் யுக்ரரேனுக்கு இருக்கிறது என்றும், ரஷ்யாவின்
இந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக யுக்ரேனுக்கு ஆதரவாக நாங்கள் நிற்போம் என்றும் தெரிவித்தார்.

Leave A Reply