பாஜக மாதிரியா திமுக? – Ravishankar Ayyakkannu

Share
“மோடி வெற்றி பெற்றால் ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் தருவோம் என்றீர்களே! அது என்ன ஆச்சு?” என்று நிருபர் கேட்கிறார்.
“நாங்கள் எங்கு ஆட்சிக்கு வரப் போகிறோம் என்று நினைத்து இஷ்டத்துக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசினோம். அய்யோ பாவம், நீங்கள் அதை எல்லாம் நம்பிவிட்டீர்கள். பிம்பிலிக்கி பிலாப்பி” என்று பாஜக ஆசாமி கூலாகப் பதில் சொன்னார்.
“சொன்னதைச் செய்வோம். செய்வதைத் தான் சொல்வோம்” என்பது திமுகவின் தாரக மந்திரம்.
* கல்விக் கடன் தள்ளுபடி
* மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை
போன்ற பல்வேறு வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லையே என்று யாராவது கேள்வி கேட்டால்,
“அரசின் நிதிநிலை சரியில்லை. சரியானவுடன் கட்டாயம் செய்வார்கள். அதற்கான வேலைகளை முதலமைச்சரும் நிதி அமைச்சரும் செய்து வருகிறார்கள்” என்று தெளிவாகவும் நம்பிக்கையுடனும் பதில் கூறி வருகிறோம்.
அது போல், நிதி சாராத அரசியல் உரிமை சார்ந்த பிரச்சினைகளிலும் இது வரை என்ன செய்திருக்கிறோம், அடுத்து என்ன செய்வதாகத் திட்டம் என்பதைத் தெரிவிப்பதும் வழிநடத்துவதும் திமுகவின் கடமை.
அப்போது தான் மக்களின் நம்பிக்கையைத் தக்க வைக்க முடியும்.

Leave A Reply