இது புல்டோசர் போகும் பாதை – இரா.இராஜாராம்

Share

புல்டோசர்கள் போகும் பாதையில்
வீடுகளைக் கட்டியது யார்?

அந்த வீட்டின்
சமையலறையில்
மாட்டுக்கறி
கொதிப்பதுவும் ஏன் ?

அந்த வீட்டு
அலமாரிகளில்
பர்தாக்களுக்கும்
புர்க்காக்களுக்கும்
என்ன வேலை?

பறக்கும் காகம்
கருப்புதான் என்று
அந்த வீட்டில் இருந்து
ஏன் குரல் கேட்கிறது ?

மாட்டுக்கறி கொதிப்பதும்
மாட்டிக்கொள்ள புர்காவும்
எதிர்க்கும் எதிர்க்குரலும்
அந்த வீடுகளிலிருந்து
வருமெனில்…..

உங்கள் வீடுகளைச்
சற்றே
நகர்த்திக் கொள்ளுங்கள்.
“இது புல்டோசர் போகும் பாதை!”

-இரா.இராஜாராம்.

Leave A Reply