ஓபிஎஸ்சின் சொந்த வார்டும் போச்சு… சொந்த தொகுதியும் போச்சு… சொந்த மாவட்டமே போச்சு…

Share

எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரை கைப்பற்றியதை பெருசா செய்தியாக்குகிறார்கள். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமோ, சொந்தத் தொகுதியோ இல்லை, சொந்த வார்டில் அவருக்கு ரொம்ப வேண்டபட்ட மஞ்சுளா முருகனைக்கூட காப்பாற்ற முடியவில்லை என்ற செய்தி ஏன் பரவவில்லை என்பது தெரியவில்லை.

ஒருவேளை திமுகவுக்கு தண்ணிகாட்டிய மேற்கு மண்டலத்தின் வெற்றியை மட்டுமே போகஸ் செய்கிறார்களோ என்று தோன்றுகிறது. கடந்த பேரவை தேர்தலில்கூட போடி தொகுதியில் தங்கத் தமிழ்செல்வனிடம் தட்டுத்தடுமாறித்தான் பன்னீர்செல்வம் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் சொந்த மாவட்டத்தில் அடைந்த தோல்வியை பெரிதுபடுத்தாமல் இருப்பதுமட்டுமல்ல, அவருடைய சொத்துக்குவிப்பு குறித்தும் திமுக பெரிய அளவில் கவலைப்படவில்லை என்பது வியப்புக்கு உரிய விஷயமாகவே இருக்கிறது.

இந்தத் தேர்தல் முடிவுகள், அதிமுகவின் இரட்டைத் தலைமைக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது தெரியவில்லை. எடப்பாடிக்கும் ஓ பன்னீருக்கும் இடையே பாஜகவை ஆதரிப்பதில் நடக்கும் போட்டியால்தான் இந்த தோல்வி என்பதை இனியாவது அதிமுகவினர் உணர்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அனேகமாக, வடக்கே நடக்கும் 5 மாநில தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்தால் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறுகிறார்கள்.

Leave A Reply