சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம் – 10 – Fazil Freeman Ali

Share

இப்ப‌டி வாழ்க்கை அமைதியாய் ஓடிக்கொண்டிருந்த‌ சூழ‌லில், இங்கு வ‌ந்து குடியேறியிருந்த‌ இன‌த்திலொன்று “இறை” என்ற‌ க‌ற்ப‌னாவாத‌ க‌ருத்திய‌லை கண்டுபிடித்த‌து. அதுவ‌ரை பிர‌ப‌ஞ்ச‌ ஆற்ற‌லான‌ இய‌ற்கையுட‌ன் ஒன்றி வாழ்ந்திருந்த‌ ம‌க்க‌ளிட‌ம், “அந்த‌ இய‌ற்கையையும் ப‌டைத்த‌துதான் இறை” என்று பிர‌ச்சார‌ம் முடுக்கிவிட‌ப்ப‌ட்ட‌து.

“ந‌ம் புல‌ன்க‌ளுக்கு புல‌ப்ப‌டாத‌ ஒன்று இருக்கிற‌து, அத‌ன் பெய‌ர்தான் இறை. எல்லாம் அந்த‌ இறைவ‌னின் நாட்ட‌ப்ப‌டியே ந‌ட‌க்கிற‌து. இறைவ‌னே ந‌ம்மை உருவாக்கி, உண‌வ‌ளித்து, வாழ‌வைத்து, ம‌ர‌ணிக்க‌வும் செய்ப‌வ‌ன்” என்று துவ‌ங்கி நிறைய‌ புதுப்புது க‌தைக‌ளை உருவாக்கிய‌து அந்த‌ கூட்ட‌ம். ப‌குத்த‌றிவோடும் த‌ர்க்க‌ரீதியிலும் சிந்த‌னைக‌ளை வ‌குத்துக்கொண்டிருந்த‌ ச‌மூக‌த்திட‌ம் “அறிவுக்கும் த‌ர்க்க‌த்திற்கும் அப்பாற்ப‌ட்ட‌து இந்த‌ இறையின் இருப்பு” என்று அழுத்த‌மாக‌ வாதிட‌ப்ப‌ட்ட‌து.

த‌ன் க‌ண்முன்னே எல்லா உயிர்க‌ளும் உருவாகி, வ‌ள‌ர்ந்து ஒரு க‌ட்ட‌தில் இற‌ந்து இய‌ற்கையோடு க‌ரைந்துபோவ‌தைக் க‌ண்டு, தாம் இற‌ப்ப‌தும் அந்த‌ இய‌ற்கையின் நிய‌தியே, “வாழ்வு எனும் பெருந‌தியில் ந‌ம் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கை ஒரு சிறு துளி” என்று வாழ்ந்திருந்த‌ ம‌க்க‌ளுக்கு, ம‌ர‌ண‌ம் முடிவ‌ல்ல‌, அத‌ற்கு பின்னும் வாழ்க்கை தொட‌ர்கிற‌து என்ற‌ க‌ருத்து புதிய‌தாக‌ இருந்தாலும் ம‌ன‌துக்கு பிடித்த‌மான‌தாக‌ இருந்த‌து.

“பிணி, மூப்பு, ம‌ர‌ண‌ம் இம்மூன்றும் கால‌ச்ச‌க்க‌ர‌த்தின் சுழ‌ற்சியால் ஏற்ப‌டும் த‌விற்க‌முடியாத‌ தொட‌ர் மாற்ற‌ங்க‌ள்” என்று வாழ்ந்திருந்த‌ ம‌க்க‌ளுக்கு ம‌ர‌ண‌த்துக்குப்பின் இவை எதுவும் இல்லாத‌ நித்திய‌ ஆன‌ந்த‌ ஸ்வ‌ரூப‌ வாழ்க்கை காத்துக்கொண்டிருக்கிற‌து என்ப‌து இனிப்பான‌ வாக்குறுதியாக‌ இருந்த‌து. அறிவுசார் த‌ள‌த்தில் அறிஞ‌ர்க‌ள் இத‌ற்கு த‌க்க‌ ப‌தில‌டிக‌ள் தொட‌ர்ந்து கொடுத்து வ‌ந்தாலும் வெகுஜ‌ன‌ ம‌க்க‌ளுக்கு ம‌ர‌ண‌த்துக்கு பிந்தைய‌ ப‌ர‌வ‌ச‌ வாழ்க்கை ஏதோ ஒருவித‌த்தில் ஆசையையும் ந‌ம்பிக்கை ஊட்டுவ‌தாக‌ அமைந்த‌து.

இற‌ந்து போன‌வ‌ர்க‌ள் யாரும் எழுந்துவ‌ந்து கேள்விகேட்க‌ப் போவ‌தில்லை என்ற‌ உறுதியான‌ அடித்த‌ள‌த்தில் க‌ட்ட‌மைக்க‌ப்ப‌ட்ட‌ இந்த‌ க‌ருத்திய‌ல், பாம‌ர‌ர்க‌ளின் க‌ற்ப‌னையில் அழ‌கிய‌ க‌ன‌வு மாளிகையாய் க‌ம்பீர‌மாய் காட்சிய‌ளித்த‌து.

“க‌ண்ட‌வ‌ர் விண்டில‌ர், விண்ட‌வ‌ர் க‌ண்டில‌ர்” என்று சில‌ சான்றோர் ந‌கைத்துக் க‌ட‌க்க‌… ஏற்க‌ன‌வே க‌தை கேட்ப‌தில் ஆர்வ‌ம் கொண்டிருந்த‌ ம‌க்க‌ள் இந்த‌ கூட்ட‌த்தின் புதுப்புது க‌தைக‌ளை கேட்ப‌த‌ற்கு கூடிய‌ வேக‌த்தை பார்த்து ஆண்ட‌வ‌னை ஆக்கிய‌வ‌ர்க‌ளே அச‌ந்துபோயின‌ர்.

வ‌ந்து குவிந்த‌ ம‌க்க‌ள் ந‌ன்கொடையாக‌ ப‌ண‌மும் பொருட்க‌ளும் காணிக்கையாக‌ இவ‌ர்க‌ளின் கால‌டியில் கொட்ட‌, உழைக்காம‌ல் வ‌யிறு வ‌ள‌ர்க்க‌ வ‌ழிசெய்யும் வ‌சீக‌ர‌மான‌ புதிய‌ தொழில் உத‌ய‌மாயிற்று. சில‌ த‌லைமுறைக‌ளிலேயே இந்த‌ தொழில் செழித்து வ‌ள‌ர்ந்து நிறுவ‌ன‌ம‌ய‌மாகிப்போன‌து. அந்த‌ நிறுவ‌ன‌மும் இந்த‌ குறிப்பிட்ட‌ இன‌க்குழுவின‌ரின் முழுக்க‌ட்டுப்பாட்டில் நிர்வ‌கிக்க‌ப்ப‌ட்டு செய‌ல்ப‌ட்ட‌து.

நீங்க‌ள் பேசுவ‌து ம‌னித‌ மொழி, க‌ட‌வுள‌ர் பேசுவ‌தோ வேறு மொழி. அது எங்க‌ளுக்கு ம‌ட்டுமே தெரியும். அந்த‌ தெய்வ‌பாஷையில் பேசினால் ம‌ட்டுமே தெய்வ‌ங்க‌ள் கேட்கும், க‌ட்டுப்ப‌டும் என்று கூறி த‌ம்மை சாமானிய‌ ம‌க்க‌ளைவிட‌ சில‌ ப‌டிநிலைக‌ள் உய‌ர‌த்தில் வைத்துக்கொண்ட‌து இந்த‌க்கூட்ட‌ம். “நாம‌ சாமிக்கிட்ட‌ பேச‌ணும்னா முத‌ல்ல‌ இவ‌ங்க‌க்கிட்ட‌ சொல்ல‌ணும், இவ‌ங்க‌ சாமியோட‌ பாஷைல‌ ச‌மிக்கிட்ட‌ ந‌ம‌க்காக‌ பேசுவாங்க‌. ஏன்னா ந‌ம‌க்குத்தான் சாமியோட‌ மொழி தெரியாதுல்ல‌…” என்ற ந‌ம்பிக்கை பாம‌ர‌ம‌க்க‌ள் ம‌ன‌தில் ஆழ‌மாக‌ ஊன்ற‌ப்ப‌ட்ட‌து.

வெகுஜ‌ன‌ ம‌க்க‌ளின் நீச‌ பாஷையில் அதுவ‌ரை எழுத‌ப்ப‌ட்ட‌ வாழ்விய‌ல் சிந்த‌னைக‌ளும் த‌த்துவ‌ங்க‌ளும் நெருப்பிலிட்டு எரிக்க‌ ஒரு ப‌ண்டிகையே உருவாக்க‌ப்ப‌ட்டு ஒவ்வொரு வீட்டிலிருந்த‌ ஓலைச்சுவ‌டிக‌ளும் நெருப்புக்கு விற‌காக்க‌ப்ப‌ட்ட‌ன‌. மிக‌ச்சில‌ சான்றோர் ஆக்க‌ங்க‌ளே இந்த‌ அழிவிலிருந்து விஞ்சின‌, த‌ப்பித்த அவையும் இந்த‌ பாத‌க‌ர்க‌ளுக்கு அஞ்சி ம‌றைவாக‌வே பாதுகாக்க‌ப்ப‌ட்ட‌ன‌. இந்த‌ ம‌ண்ணின் எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ர‌லாற்றை எரித்து ஒழித்த‌பின், தாங்க‌ள் இங்கு கால‌டி எடுத்து வைத்த‌பின்தான் இம்ம‌ண்ணின் நாக‌ரிக‌ வ‌ர‌லாறே துவ‌ங்கிய‌து என்று கூசாம‌ல் பொய் சொன்ன‌து இந்த‌ வ‌ஞ்ச‌க‌ர் கூட்ட‌ம்.

“திருநெல்வேலிக்கே அல்வா குடுத்த‌ க‌தை”யாய் உல‌க‌மே போற்றும் க‌தைசொல்லிக‌ளை உருவாக்கிய‌ ச‌முதாய‌த்திற்கே புதிய‌ க‌தைக‌ள் இற‌க்கும‌தி செய்ய‌ப்ப‌ட்ட‌து. ஏற்க‌ன‌வே புழ‌க்க‌த்தில் இருந்த‌ ப‌ழ‌ங்க‌தைக‌ளில் இட்டுக்க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ இறைக்க‌தைக‌ள் சாதுர்ய‌மாக‌ இணைக்க‌ப்ப‌ட்டு, பொய் எது மெய் எது என்று பிரித்துண‌ர‌ இய‌லா வ‌ண்ண‌ம் க‌ட்டுக்க‌தைக‌ள் க‌ட்ட‌விழ்த்து விட‌ப்ப‌ட்ட‌ன‌.

ம‌க்க‌ளின் ஆத‌ர‌வும் ம‌ரியாதையும் பெற்ற‌வ‌ர்க‌ள் ம‌ன்ன‌ர்க‌ளுக்கு நெருக்க‌மாகிப்போவ‌து இய‌ல்புதானே, இல்லையா..? இதுதான் இங்கும் ந‌ட‌ந்த‌து.

இதுநாள்வ‌ரை அர‌ச‌ ப‌த‌வியை ம‌க்க‌ளை பாதுகாக்கும் பொறுப்பாக‌ க‌ருதி அற‌த்தோடு ஆண்டுகொண்டிருந்த‌ அர‌ச‌ர்க‌ளிட‌ம், “அப்ப‌டியெல்லாம் இல்லை. நீ இறைவ‌னின் பிர‌திநிதி, தெய்வ‌ அனுக்கிர‌க‌த்தோடு பிற‌ந்த‌வ‌ன் நீ. ஆள்வ‌தும் அனுப‌விப்ப‌தும் உன் பிற‌ப்புரிமை. உன் செய‌ல்க‌ள் அனைத்தும் தெய்வ‌ஆசீர்வாத‌ம் பெற்ற‌வை. நீ ம‌னித‌ர்க‌ளின் விம‌ர்ச‌ன‌த்திற்கும் தீர்ப்புக்கும் அப்பாற்ப‌ட்ட‌வ‌ன். இதுவே இராஜ‌த‌ர்ம‌ம்” என்று ம‌ந்திர‌ம் ஓதிய‌து இந்த‌க்கூட்ட‌ம்.

ஆர‌ம்ப‌த்தில் இதை ந‌கைச்சுவையாக‌ கேட்டு சிரித்து க‌ட‌ந்துவிட்ட‌ன‌ர் ப‌ல‌ ம‌ன்ன‌ர்க‌ள்.

செல்வ‌த்தையும் அதிகார‌த்தையும் சுவைத்து ப‌ழ‌கிப்போயிருந்த‌ இந்த‌ “ப‌டைப்பாள‌னை ப‌டைத்த‌வர்க‌ள்” ம‌ன்ன‌ர்க‌ளை அப்ப‌டியெல்லாம் சும்மா விட்டுவிடுவார்க‌ளா, என்ன‌…? புதிய‌ (கு)யுக்தியொன்றை கையிலெடுத்த‌ன‌ர்….

சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம் – 11 – Fazil Freeman Ali

Leave A Reply