திமுக ஒன்றியச் செயலாளர்களால் ஊராட்சித் தலைவர்கள் அனுபவிக்கும் தொல்லைகள்!

Share

ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை திமுக ஒன்றியச் செயலாளர்கள் பறித்துக் கொள்வதாகவும், உரிய நேரத்தில் அந்த வேலைகள் நடைபெறுவதில்லை என்றும் புலம்பல்கள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன.

ஊராட்சித் தலைவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால், அந்தந்த ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் வளர்ச்சிப் பணிகளை செய்வதற்கு வார்டு மெம்பர்களுக்கும், துணைத்தலைவருக்கும் பங்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்கெனவே கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுக ஊராட்சித் தலைவராக இருந்தாலும், வார்டு மெம்பர்களாக இருக்கும் திமுக ஆட்களே முட்டுக்கட்டை போடும் நிலை இருக்கிறது. இந்த நிலையில்தான், ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் வளர்ச்சிப் பணிகளை ஒன்றியச் செயலாளர்கள் தங்களுக்கு வாரிக் கொள்வதாகவும், உரிய நேரத்தில் அந்த வேலைகள் முடிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன.

பல மாவட்டங்களில் ஊராட்சி வளர்ச்சித் திட்டப்பணிகளை ஒன்றியச் செயலாளர்கள் எடுத்துக்கொண்டு, கிளைச் செயலாளர்களைக் கொண்டு செய்வதாக கூறுகிறார்கள்.

இதையடுத்து, பல மாவட்டங்களில் ஊராட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊராட்சி வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் ஒன்றியச் செயலாளர்களுக்கு ஒதுக்கப்படுகிறது என்கிறார்கள். ஊராட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்களுடைய எதிர்ப்பு உள்ளுக்குள் கனன்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்களின் உரிமையை பாதுகாக்க திமுக தலைமையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

P. அமுதா, இ.ஆ.ப., ( அரசு முதன்மை செயலாளர் )

தொலைபேசி 25670769

மின்னஞ்சல் [email protected]

Leave A Reply