டாக்டர் அல்போன்ஸ் மாணிக்கத்துக்கு மாணவர்கள் வாழ்த்து

Share

சென்னை லயோலா கல்லூரியைச் சேர்ந்த அருட்தந்தை முனைவர் அல்போன்ஸ் மாணிக்கம் அவர்கள் துறவறம் ஏற்று 50ஆவது பொன்விழா ஆண்டு சனிக்கிழமை தொடங்கியது. இதையடுத்து அவரால் கல்வி பெற்ற ஆயிரக்கணக்கான கிராமப்புற ஏழை மாணவர்கள் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அருட்தந்தை அல்போன்ஸ் மாணிக்கம் கடலூர் மாவட்டம் சிலுவைப் பாளையம் என்ற கிராமத்தில் 1953 ஆம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் மாணிக்கம் பிச்சம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது கடைசிக் குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்களும் இரண்டு மூத்த சகோதரிகளும் உண்டு.

1972 ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் உள்ள பெஸ்ச்சி கல்லூரியில் ஏசு சபையில் சேர்ந்து துறவறம் ஏற்றார். அதன்பின்னர் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ., வரலாறு பாடம் எடுத்து பட்டம் பெற்றார். அதன்பின்னர் செம்பகனூர் புனித இருதய கல்லூரியில் தத்துவப்பாடத்தில் தேறினார்.

சென்னை தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் எம்.ஏ., வரலாறு பட்டம் பெற்ற இவர், சென்னை அருட்கடல், டெல்லி வித்யா ஜோதி ஆகிய கல்லூரிகளில் இறையியல் பட்டம் பெற்றார்.

அதைத்தொடர்ந்து இறையியல் பணிகளில் நியமனம் பெற்று பணிபுரிந்தாலும், தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் எம்.ஃபில்., பட்டமும், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிஎச்டி பட்டமும் பெற்றார். 2007 ஆம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியர், வரலாறு துறைத் தலைவராக 19 ஆண்டுகள் பணியாஹ்றினார்.

லயோலா கல்லூரியில் பல்வேறு உயர் பொறுப்புகளை இவர் வகித்துள்ளார். பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றிய இவர், அந்தக் கல்லூரியில் அதுவரை இல்லாத பட்ட வகுப்புகளை தொடங்குவதில் பங்களித்தார். கல்லூரியின் தரம் மேம்படுத்தப்பட்டது.

இவருடைய சிறப்பு இதையும் தாண்டி, கிராமப்புற மாணவர்களைச் சந்தித்து, அவர்களுடைய படிப்புகுறித்து கேட்டறிந்து, அவர்களுடைய உயர்கல்விக்கு ஆலோசனை வழங்கி அவரவருக்கு சில கல்லூரிகளை பரிந்துரைப்பதும், அவர்களுடைய விருப்பம் அறிந்து அதற்கேற்ற பட்ட வகுப்புகளை பரிந்துரைப்பதுமே.

இவருடைய பரிந்துரையால் ஆயிரக்கணக்கான கிராமப்புற ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்று, பல்வேறு உயர் பொறுப்புகளில் இருக்கிறார்கள். வெளிநாடுகளிலும் பலர் பணிபுரிகிறார்கள்

அவர் துறவறம் ஏற்று 50 ஆண்டுகள் தொடங்குவதை ஒட்டி அவரால் உயர்ந்த மாணவர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

தென்கொரியாவில் பணிபுரியும் டாக்டர் ஆரோக்கியராஜ், சகாய டர்சியூஸ் பீ உள்ளிட்ட பலரும் அருட்தந்தை டாக்டர் அல்போன்ஸ் மாணிக்கம் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Leave A Reply