விளம்பர மோகிகளின் போஸ்டர் கலாச்சாரம்..!

Share

யோசித்துப் பார்த்தால் இந்த பேனர்களால் யாருக்குப் பெருமை என்பது புரிபடவே இல்லை. முதல்வர் தளபதியோ, ரொம்ப காலமாகவே போஸ்டர்களையும் விளம்பர பேனர்களையும் தவிர்த்து வருகிறார்.

ஆனால், லோக்கல் தலைவர்களோ இவற்றில் தொடர்ந்து ஒருவித மயக்கத்திலேயே இருக்கிறார்கள். அதிலும் பேனர் வைக்கும் கீழ்மட்ட நிர்வாகிகளை அவர்கள் ஊக்குவிக்கும் லட்சணத்தில், அடுத்த நிலையில் பொறுப்பு கனவில் இருப்பவர்களும் போஸ்டர் அச்சிட்டு தங்களை விளம்பரப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அமைச்சர்களுக்கோ மாவட்டச் செயலாளர்களுக்கோ பேனர் வைப்பவர்கள், அவர்களுடைய படங்களை ஆளுயரத்துக்கு அடிக்கிறார்கள். போஸ்டர் அடித்தவர்கள் படங்களைவிட ஸ்டாலின், உதயநிதி, படங்களை சிறிதாக அடிக்கிறார்கள்.

மறைந்த தலைவர்களின் படங்களையோ கண்களுக்குத் தெரியாத அளவில் மிகச்சிறிதாக அடிக்கிறார்கள். பல போஸ்டர்களில் அவர்களுக்கு இடமே இருப்பது இல்லை.

முதலில் போஸ்டர் அடித்தால் அமைச்சர்களையோ, நிர்வாகிகளையோ காக்கா பிடிக்கலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும். இரண்டாவது, கட்சித் தலைவரைக் காட்டிலும், தங்கள் படங்களை பெரிதாக போடும் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களை தூக்கி அடிக்க வேண்டும்.

இதெல்லாம் செய்யாமல் விட்டுவிட்டு, பச்சிளம் குழந்தையின் சாவுக்கு இழப்பீடு வழங்குவதாலோ, மீண்டும் மீண்டும் கட்டளையிடுவதாலோ இந்த விளம்பர மோகிகளை கட்டுப்படுத்த முடியாது.

Leave A Reply