பாஜக – அதிமுக கூட்டணி கட்சிகளைத் தண்டிக்க விவசாயிகள் கூட்டமைப்பு வேண்டுகோள்!

Share

தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு, இந்தியாவின் மாபெரும் உழவர்போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற*, *500 விவசாய அமைப்புகளைக் கொண்டுள்ள சாமியுக்ட் கிசான் மோர்ச்சாவின் வேண்டுகோள்.

திர்வரும் தேர்தல்களில் விவசாயிகள் விரோத பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை த் தண்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது…

*தமிழகத்தின் அன்பான விவசாயி சகோதர சகோதரிகளே,

கடந்த 105 நாட்களாக, லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் விவசாயத்தையும், கிராமங்களையும் விட்டு வெளியேறி, டெல்லி நரத்தின் வாசல்களில் தங்களுடைய டிராலிகளுடனான டிராக்டர்களுடன் கூடாரங்களில் தங்கி முகாமிட்டுள்ளனர். இங்கே, அவர்கள் டெல்லியின் தசைகளை உறையச் செய்யும் கொடுமையான குளிர்காலத்தையும், மழையையும் தாங்கியுள்ளனர். இப்போது, ​​கடுமையான கோடை காலம் தொடங்குகிறது. இருப்பினும், இந்த விவசாயிகள் வீட்டிற்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை.

அவர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காக இங்கே வந்துள்ளனர்.

விவசாயிகள் தங்கள் சொந்த உரிமைகளுக்காக மட்டும் போரடவில்லை , நம்முடைய வருங்கால தலைமுறையினருக்காகவும், இந்தியாவின் விவசாயத்தை காப்பாற்றுவதற்காகவும் போராடுகிறார்கள். நாட்டில் உள்ள விவசாயிகளின் கவுரவத்தை பாதுகாக்க அவர்கள் இங்கு வந்துள்ளனர். இந்த போராட்டத்தில் இதுவரை 290 விவசாயிகள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது – சிலர் கடுமையான குளிரினாலும், சிலர் நோய்வாய்ப்பட்டும், சிலர் விபத்துக்களினாலும் மற்றும் ஒரு சிலர் தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொண்டும் இறந்திருக்கின்றனர்.

மத்தியிலும், மாநிலங்களிலும் உள்ள பாஜக அரசாங்கங்களைப் பற்றிய கசப்பான உண்மையை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்:

ஏழை விவசாயிகளுக்கும், மற்றும் நுகர்வோருக்கும் அரசாங்கம் அளிக்கக்கூடிய எந்தவொரு மிகக் குறைந்த பாதுகாப்பையும் நீக்கக்கூடிய? மூன்று உழவர் எதிர்ப்பு சட்டங்களை பாஜக அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பாஜக அரசாங்கம் கார்பரேட்கள் மற்றும் பெரும் மூலதனத்தின் விரிவாக்கத்திற்கு வழிவகை செய்கிறது. விவசாயிகள் எவரும் இவ்வாறு செய்யுங்கள் என்று வேண்டுகோளும் வைக்கவில்லை அல்லது விவசாயிகள் எவரையும் கேட்டும் செய்யவில்லை. இந்த சட்டங்கள் நமது எதிர்காலத்தையும் நமது எதிர்காலத் தலைமுறையையும் அழிக்கக்கூடியவையாகும்.

இந்த சட்டங்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கிய விவசாயிகளை பாஜக அரசு இழிவுபடுத்தியது மற்றும் அசிங்கப்படுத்தியது – அவர்களை அரசியல் கட்சிகளின் ஏஜண்டுகள் என்றனர், தீவிரவாதிகள் என்றனர், தேச விரோதிகள் என்றனர்,இப்படியாக அவர்களைத் தொடர்ந்து அவமதித்தனர்.

• பாஜக அரசாங்கத்தின் அமைச்சர்கள் உழவர் தலைவர்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்துவதுபோல நாடகம் ஆடினர். ஆனால் உண்மையில், விவசாயிகள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் காது கொடுத்துகூட கேட்கவில்லை.

• போராடிய விவசாயிகள் மீது, பாஜக அரசுகள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசவும், தண்ணீர் பீச்சி அடிக்கவும், லத்திகளைக் கொண்டு தாக்கவும் உத்தரவிட்டன. அப்பாவி விவசாயிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

• போராட்டத் தளங்களில் விவசாயிகள் மீது கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களில் பாஜக உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை மற்றும் அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றிற்கு எதிர்வினையாற்ற, நாங்கள் இப்போது உங்கள் உதவியை நாடுகிறோம்.

*சில நாட்களில், உங்கள் மாநிலத்தில், மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல்களில் நீங்கள் வாக்களிக்க இருக்கிறீர்கள்*. *மோடி அரசுக்கு, சத்தியத்தின் மொழி, நல்லவைகள், நீதி மற்றும் நியாயம், அரசியலமைப்பு விழுமியங்கள் போன்றவை புரியவில்லை என்பதை நமக்கு புரிந்துவிட்டது. ஆயினும், மோடி அரசுக்கு வாக்குகள், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அதிகாரத்தின் மொழி புரிகிறது. வாக்குகளுக்காகவும், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்காகவும் மற்றும் அதிகாரத்திற்காகுமான மோடி அரசின் வேட்கையை உடைத்து நொறுக்கும் சக்தி இப்போது உங்கள் கையில் உள்ளது.

*பாஜக தென் மாநிலங்களில் கால் ஊன்றுவதற்கு கடுமையான முயற்சி செய்து வருகிறது. அதற்காக கூட்டணி கட்சிகளை அமைத்து அவற்றோடு இணைந்து செயல்படுகிறது. இந்திய உழவர்களுடன் மோதுவது புத்திசாலித்தனம் அல்ல என்ற பாடத்தை, விவசாயிகள் விரோத மற்றும் அதிகாரத்திற்காக அலைகின்ற பாஜகவுக்கு, தமிழக விவசாயிகள் புகட்டுவதற்கு இதுதான் சரியான நேரம். நீங்கள் இந்த பாடத்தை அவர்களுக்குப் புகட்டினால், அக் கட்சியின் இறுமாப்பை ஒழிக்க முடியும், மேலும் நடந்துகொண்டிருக்கின்ற விவசாயிகள் போராட்டத்தின் கோரிக்கைகளை நாம் வென்றெடுக்க முடியும்.

*நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா உங்களிடம் சொல்ல விரும்பவில்லை, ஆனால் பாஜகவுக்கும் தமிழகத்தில் அவர்களுடன் கூட்டணியில் உள்ள அஇஅதிமுக மற்றும் பாமகவுக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறது*.

எந்தவொரு குறிப்பிட்ட கட்சிக்காகவும் நாங்கள் வாதிடுவதில்லை. *எங்களின் ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே – தாமரை சின்னத்திற்கும் அதனுடன் தமிழகத்தில் கூட்டணியில் உள்ள இரட்டை இலை மற்றும் மாம்பழம் சின்னங்களுக்கும் தவறிப்போய்கூட வாக்களிக்க வேண்டாம் என்பதே*.

கடந்த மூன்றைரை மாதங்களுக்கும் மேலாக, டெல்லியைச் சுற்றி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போராட்ட தளங்களிலிருந்து வீடு திரும்பவில்லை.

*டெல்லியைச் சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பி, குடும்பங்களைச் சந்திப்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. ஒரு விவசாயியின் வலியையும், வேதனையையும் மற்றொரு விவசாயினால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். மேலும் தமிழ்நாட்டு விவசாயிகளின் போராட்ட குணம் அனைவரும் அறிந்ததே. எங்கள் வேண்டுகோளை ஏற்று சாதகமான வகையில் பங்காற்றுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் வாக்களிக்கும் போது இந்த வேண்டுகோளை நீங்கள் நினைவில் கொண்டு செயல்படுவீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இப்படிக்கு
உங்களின்
சம்யுக்ட் கிசான் மோர்ச்சா

Leave A Reply