பூமிக்குத் திரும்பிய விண்கலம் (ஆகஸ்ட் 29, 1965) – History of space exploration

Share

விண்கலம் ஒன்றில் 8 நாட்கள் பூமியைச் சுற்றிய இரண்டு அமெரிக்க வீரர்கள் விண்கலத்துடன் பத்திரமாக பூமிக்குத் திரும்பினார்கள்.

அமெரிக்க விஞ்ஞானிகள் ஜெமினி-5 என்ற விண்கலத்தை உருவாக்கினர். அதில் சார்லஸ் கோன்ராடு, கார்டன் கூப்பர் என்ற இரு விண்வெளி வீரர்கள் பயணம் மேற்கொண்டார்கள்.

இருவரும் பூமியை 120 முறை சுற்றி வந்தார்கள். மொத்தம் 53 லட்சத்து 31 ஆயிரத்து 745 கிலோ மீட்டர்கள் பயணம் செய்தார்கள். அதுவரை இருந்த சாதனையை இருவரும் முறியடித்தார்கள்.

8 நாட்கள் தங்கியிருந்த அவர்கள் இருவரும் தங்களுடைய விண்கலத்தில் அட்லாண்டிக் பெருங்கடல் மீது இறங்கினர்.

நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்யிருந்தாலும் இருவரும் நல்ல உடல் நலத்துடன் பூமிக்குத் திரும்பினர். விண்கலம் கடலில் விழுந்தவுடன் இருவரும் அதிலிருந்து வெளிப்பட்டு கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தகவல் அனுப்பினர்.

“நாங்கள் இருவரும் கடலில் மிதக்கிறோம். நல்ல நிலையில் இருக்கிறோம்”
விண்வெளி வீரர்களே தகவலைத் தொடர்ந்து ஹெலிக்காப் டர்கள் விரைந்தன. மருத்துவர்கள் இருவரையும் பரிசோதித்தனர்.

“இருவரும் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியம்கூட இல்லை”
ஜெமினி-5 விண்கலம் திட்டமிட்டதற்கு சிறிது முன்னதாகவே தரைக்குத் திரும்பும்படி நாஸா உத்தரவிட்டது. விண்கலம் கடலில் இறங்கும் பகுதியில் புயல் உருவாகும் அறிகுறி இருந்ததால் இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

முன்னதாக ஜெமினி-5 விண்கலத்தில் தங்கியிருந்த வீரர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் அழுத்தம் கவலைப்படும் விதத்தில் குறைந்தது. அது தரையிலிருந்த விஞ்ஞானிகளுக்கு கவலை அளித்தது. எனவே பயணத்திட்டத்தை சுருக்கி இருந்தனர்.

ஜெமினி விண்கல சோதனை வரிசை 1961ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் 10 விண்கலங்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. 1965 முதல் 66ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 20 மாதங்களில் இவை விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.

இந்த விண்கலங்களின் முக்கிய நோக்கம் நிலவுக்கு மனிதர்கள் சென்று திரும்பும் வகையில் பயிற்சி அளிப்பதாகும்.
ஜெமினி விண்கல வரிசை சோதனை முடிந்தவுடன் அப்பலோ விண்கல வரிசை தொடங்க இருந்தது.

நிலவில் இறங்கிய சோவியத் விண்கலம் (பிப்ரவரி 03, 1966) – History of space exploration

Leave A Reply