வெளிமாநில தொழிலாளர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை சொந்த மாநிலம் செலுத்தலாம் – தமிழக அரசு

Share

வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்புதல் தொடர்பாக தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

வெளிமாநில தொழிலாளர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை சொந்த மாநிலம் செலுத்தலாம் என்றும் தொழிலாளர்களின் போக்குவரத்து கட்டணத்தை தனி நபர்களும் ஏற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் அதிகமாக இருப்பதால் தனி ரெயில் இயக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் ரெயில் நிர்வாகத்தின் கட்டுப்பாடுகள், விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வருவோர் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர். கொரோனா தொற்று இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர் என்றும் சோதனையில் தொற்று உறுதியாகவில்லை என்றாலும் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply